“நூறு ஆண்டுகளைத் தாண்டி நிற்கும் கருத்து; அந்தக் கருத்தின் பெயர் பெரியார்” – மநீம தலைவர் கமல்ஹாசன்…

ஒடுக்கப்பட்டோருக்காகவே சிந்தித்த, செயல்பட்ட பெரியாருக்கு 143 என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்று தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார்.அதன்பின்பு முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன்படி,இன்று பலரும் பெரியாரின் பிறந்த நாளை … Read more

சிக்கனமாக ஆட்சி நடத்தி கடன் இல்லாமல் நிர்வாகம் செய்யவேண்டுமென விரும்பியவர் அறிஞர் அண்ணா – கமலஹாசன்

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ட்வீட். அறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த நாளில், திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படும் நிலையில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜனநாயகத்தின் விழுமியங்களின் மீது ஆழமான பற்றுக்கொண்டவர், மாநில சுயாட்சிக்காக … Read more

இது ஒரு நாடு..! இது ஒரு தேர்வு..! சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்…! – கமலஹாசன்

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் நீட் தேர்வு தொடர்பாக ட்வீட். கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தனுஷ் தற்கொலை  இந்த நீட் நுழைவு தேர்வை ரத்து செய்யுமாறு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையிலும், … Read more

“அவரவர் துறையில் பாரதியாக முயல வேண்டும்” – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ..!

தமிழ் நிலத்திற்கென பெரும் கனவுகளைத் தந்துவிட்டுச் சென்ற பாரதி, தமிழறிந்த ஒவ்வொருவரிலும் வாழ்வதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் மகாகவி நாளாக அனுசரிக்கப்படுகிறது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பாரதியாரின் பெருமையை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில்,மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று,அவரவர் துறையின் பாரதியாக முயல்வதே பெரும்கவிஞனின் நினைவைப் போற்ற ஆகச்சிறந்த வழி … Read more

“ஆட்சி மாறினாலும் தொடரும் மணல் திருட்டு;எதை எண்ணி வருந்துவது?” – கமல்ஹாசன் வருத்தம்…!

கூவம் ஆற்றில் அள்ளப்படும் மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்படப் போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அம்பலம்: “கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்துவருவதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. சிறப்பான முறையில் வேடிக்கை: ஐம்பதாண்டுகளாகத் தமிழகத்தில் நிகழ்வதுதானே, இதில் என்ன ஆச்சர்யம்? இந்த மணல் கொள்ளை நடப்பது … Read more

சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துக்கள்…! – கமலஹாசன்

மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது  பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வாலுக்கு தங்க பதக்கமும், சிங்ராஜுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளது. இந்த துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள மணீஷ் நர்வால் 218.2 புள்ளிகளுடன் பாராலிம்பிக்கில்  படைத்துள்ளார்.  மேலும், ஏற்கனவே 10 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியில் சிங்ராஜ் … Read more

“விண்ணப்பித்துப் பெறுவதன் பெயர் விருதல்ல.அதன் பெயர்…… – மநீம தலைவர் கமல்ஹாசன்..!

எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் விருதுபெற விண்ணப்பிக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூகத்தின் அடையாளம்: எழுத்தாளர்களை, அறிஞர்களை, கலைஞர்களை விருதுகள் வழங்கிப் போற்றுவது ஓர் ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம். பண்பாட்டிற்குப் பங்களித்த ஆளுமைகளைக் கவுரவிக்க எண்ணற்ற விருதுகள் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. விருதல்ல: இத்தகைய விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனும் அறிவிப்பும் அவ்வப்போது வெளியாகின்றன. விண்ணப்பித்துப் பெறுவதன் பெயர் விருதல்ல.அதன் பெயர் … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் – ம.நீ.ம மாநில செயலாளர்

ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அவர்கள், ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டெண்டர்களில் தில்லுமுல்லு செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும்படி செய்தார் என்று தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. … Read more

“பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்” – மநீம தலைவர் கமல்ஹாசன்..!

பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம் என்று கூறி நாட்டின் 75 வது சுதந்திர தினத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் சுதந்திர தின நாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது நாடு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி ஒரு நாடாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இதனை நாம் விடுதலை நாளாக கொண்டாடுகிறோம்.இந்த நாளில் இந்தியா முழுவதும் … Read more

“அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை;திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது” – மநீம தலைவர் கமல்ஹாசன்..!

அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை;திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். குடியரசு தினம் ஜனவரி 26, உழைப்பாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, காந்தி பிறந்தநாள் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் மக்கள் தங்கள் பகுதி கோரிக்கையை வைப்பார்கள்.கொரோனா பரவல் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதனையடுத்து,இன்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து … Read more