பூச்சாண்டி வித்தைகளை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மக்கள் பணியாளர்களுக்கு எதிராக  சதித்திட்டம் தீட்டி அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது  கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற ஓய்வறியாது உழைத்து கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், பொருளாதார மீட்பு முயற்சிகளையும், சிறந்த நிர்வாக நேர்த்தியால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின்  அரசியல் செல்வாக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதைக் … Read more

LED விளக்கு பயன்பட்டால் அரசுக்கு ரூ.286 கோடி மிச்சம்….அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்..!!

சட்டபேரவையில்  உள்ளாட்சி மின்சாதன விளக்குகள் குறித்து  சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி அமைப்புகளில் LED விளக்குகள் பொருத்தப்பட்டு பயன்படுத்தி வருவதால் அரசுக்கு ரூபாய் 286 கோடி வரை மின்சார செலவு மிச்சமாகி உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.

டெங்கு,பன்றிக்காய்ச்சலை தடுக்க வேண்டிய முதலமைச்சரும், குட்கா அமைச்சரும் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் …!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

அரசின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதை ஒருபோதும் ஏற்க இயலாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,சென்னையில் 7வயது இரட்டை குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் 13 பேர் டெங்கு,பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்திருக்கிறார்கள். இதனை தடுக்கவேண்டிய முதல்வரும், குட்கா புகழ் அமைச்சரும் அதிமுக-வின் 47வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அப்பாவி மக்கள் உயிரைவிட கொண்டாட்டம் பெரிதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் அரசின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதை … Read more