கொரோனா குறைந்தால் மட்டுமே கார்த்திகை தீபத்தின் போது பக்தகர்களுக்கு அனுமதி – அமைச்சர் சேகர்பாபு

தீபத்தின் போது திருவண்ணாமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து அமைச்சர் சேகர் பாபு விளக்கம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 7ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்று முழுவதும் குறைந்தால் மட்டுமே கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து அனைத்து விதமான சூழல்களையும் ஆராய்ந்து முதலமைச்சரின் அனுமதியோடு முடிவெடுக்கப்படும் … Read more

இனி கோயில் இட வாடகையை ஆன்லைனில் செலுத்தலாம் – அமைச்சர்

சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிய வசதியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு. தமிழகத்தில் கோயில் இடத்துக்கான வாடகையை ஆன்லைனில் செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிய வசதியை துவக்கி வைத்த அமைச்சர், கோயில் இடத்தில் உள்ள வாடைகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம் என தெரிவித்தார். இணையவழி வாடகை மூலம், எவ்வளவு … Read more

கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் கோயில் திறப்பு – அமைச்சர் சேகர் பாபு

கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் தகவல். தமிழகத்தில் கொரோனா பரவலால் இம்மாதம் இறுதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 3 நாட்களில் பக்கதர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஒரு சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திரையரங்குகள் திறப்புக்கு மட்டுமே அனுமதி வழங்கிய அரசு, ஏன் … Read more

இந்த ஆட்சியில் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் – அமைச்சர் சேகர்பாபு

அறிவிப்புகளை முதல்வர் செயல்படுத்துகிறார் என்று  இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு தகவல். தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு, தடுப்பூசிதான் கொரோனாவை வெல்லும் பேராயுதம், சென்னை இந்த முயற்சியில் வெற்றிநடை போடுகிறது, இந்தியாவிலேயே முன்மாதிரி மாவட்டமாக சென்னை விளங்கும் வகையில் அதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய … Read more

#BREAKING: இனி கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது!

கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல். கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும் மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கம் செய்யப்பட உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார். கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது செய்து ஜாமீனில் விட முடியாத அளவிற்கு சட்ட திருத்தம் செய்யப்பட்டியிருப்பதாகவும், ஏற்கனவே உள்ள சட்டத்தில் கைது செய்வதற்கான வழிவகை இல்லை என்பதால், … Read more

தமிழ்நாட்டின் நவீன ராமானுஜர் முதல்வர் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் சேகர்பாபு புகழாரம்!

பெண் காவலரை பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்த ரக்‌ஷாபந்த சகோதரர் முதல்வர் மு.க ஸ்டாலின் என்று அமைச்சர் சேகர் பாபு பேரவையில் புகழாரம். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறையில் முதன்முறையாக 110 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் சேகர் பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது பெரியாரின் கனவு. அதை அண்ணா நிறைவேற்ற முயற்சித்தார், கலைஞர் சட்டமாக்கினார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி … Read more

#BREAKING: கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணமில்லை – அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு

திருக்கோயில்களில் மொட்டையடித்தால் இனி கட்டணம் இல்லை என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர்சேகர் பாபு அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதுபோன்று, மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் திருமணம் நடத்த கட்டணம் இல்லை என்றும் அறிவித்துள்ளார். மேலும், இந்து அறநிலையத்துறை சார்பில் 10 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ரூ.641 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு – இந்து சமய அறநிலையத்துறை

ரூ.641 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல். தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பு பேரவையில் கொடுக்கப்பட்டது. அதில், திமுக அரசு அமைந்த பிறகு 203 ஏக்கர் அளவிலான வேளாண் நிலங்களும், 170 கிரவுண்டு அளவிலான காலி மனைகளும், மீட்கப்பட்டு திருக்கோயிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் இதன் சொத்து மதிப்பு ரூ.641 கோடி … Read more

ஆடி,அமாவாசை ஆடிப்பூரத்தில் பக்தர்களுக்கு தடை – அமைச்சர் உத்தரவு..!

ஆடி,அமாவாசையான ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பக்தர்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆடி,அமாவாசையான  ஆகஸ்ட் 8  மற்றும் ஆடிப்பூரமான 11 ஆம் தேதிகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பக்தர்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். எனினும்,ஆகம விதிப்படி ஆடி,அமாவாசை ஆடிப்பூரத்தில் பக்தர்களின்றி வழிபாடு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

கோயில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம்’ தொடக்கம் – அமைச்சர் சேகர் பாபு..!

கோயில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும்’ திட்டத்தை தற்போது சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்,அன்னை தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று தமிழக அரசு சார்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 3 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 பெரிய கோயில்களில் நாளை முதல் ‘அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம்’ தொடங்கவுள்ளது. இந்நிலையில்,அறநிலையத்துறைக்கு சொந்தமான … Read more