தமிழ்நாட்டின் நவீன ராமானுஜர் முதல்வர் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் சேகர்பாபு புகழாரம்!

தமிழ்நாட்டின் நவீன ராமானுஜர் முதல்வர் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் சேகர்பாபு புகழாரம்!

பெண் காவலரை பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்த ரக்‌ஷாபந்த சகோதரர் முதல்வர் மு.க ஸ்டாலின் என்று அமைச்சர் சேகர் பாபு பேரவையில் புகழாரம்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறையில் முதன்முறையாக 110 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் சேகர் பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது பெரியாரின் கனவு. அதை அண்ணா நிறைவேற்ற முயற்சித்தார், கலைஞர் சட்டமாக்கினார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி நவீன ராமானுஜராக திகழ்கிறார் என புகழாரம் சூட்டினார்.

பெண் காவலரை பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்த ரக்‌ஷாபந்த சகோதரர் முதல்வர் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், 641 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான சொத்துகளை மீட்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் கோவிலில் முழு நேர அன்னதான திட்டம் செப் 17ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் தைத்திங்கள் முதல் நாள் அர்ச்சகர்கள் பூசாரிகள் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர், மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என பாஜக உறுப்பினர் பேரவையில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube