“தமிழ் வழியில் இன்ஜினியரிங் படிப்புகள்;நாளைக்குள் செமஸ்டர் ரிசல்ட்” – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!

அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு முடிவு நாளைக்குள் வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை  மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு முடிவு நாளைக்குள் வெளியிடப்படும் என்றும்,சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகள் தமிழ் வழியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அமைச்சர் கூறியதாவது: “விருதுநகர்,தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்க்காடு,திருச்சுழி, கள்ளக்குறிச்சி,திருக்கோயிலூர், தர்மபுரி ஏரியூர், … Read more

#Breaking:திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு….!

திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். இந்நிலையில்,திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு ‘கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என … Read more

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்ஃபில் படிப்பு தொடர்ந்து நடைபெறும் – அமைச்சர் பொன்முடி

சென்னை பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்ஃபில் படிப்பை தொடர்வது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இதனையடுத்து, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உடன் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தலைமை செயலகத்தில் ஆலோசனை … Read more

தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை..!.

13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உடன் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இதனையடுத்து, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உடன் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தலைமை … Read more

கல்லூரிகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு பிறகே மாணவர்கள் சேர்க்கை தொடங்க வேண்டும்-அமைச்சர் பொன்முடி..!

தமிழக கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதிக்கு பிறகே மாணவர்களின் சேர்க்கை தொடங்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று காலை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து கலந்தாலோசித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது போன்று நடக்கக்கூடாது என கூறினார். தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் … Read more

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? -அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் கல்லூரிகளில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.மேலும், இதன்காரணமாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனையடுத்து,இன்று கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை … Read more

சிபிஎஸ்இ +2 மதிப்பெண்கள் வெளியான பிறகு பொறியியல் சேர்க்கை -அமைச்சர் பொன்முடி .!

ஜூலை 31ம் தேதிக்கு பிறகே உயர்கல்வி படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப நடைமுறைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி அவர்கள்,”அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டு மையம் … Read more