தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை..!.

13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உடன் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இதனையடுத்து, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உடன் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், பல்கலைக்கழகங்களின் நிர்வாக செயல்பாடுகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள், அதன் முடிவுகள் குறித்தும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.