10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 43 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படும்.!

ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், 43 லட்சம் முகக்கவசங்கள் வழங்கபடும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.  தற்போது ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், பொதுத்தேர்வு ஏழுதும் 10, 11, +2 மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அரசு … Read more

ரேஷன் கடைகளில் விலையில்லா முகக்கவசம் வழங்க முதல்வர் பரிசீலினை.!

கொரோனா வைரஸை தடுக்க ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்க பரிசீலினை செய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களை தவிர்த்து, பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்றும் வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொது விநியோக திட்டத்தில் பொருட்கள் தடையின்றி … Read more

செம ஐடியா : அடையாளத்தை தெரிந்துகொள்ள புதிய வகை மாஸ்க்.!

கேரளாவில் புகைப்பட கலைஞர் ஒருவர் புதிய வகை மாஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளார். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணி ஒருபக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கொரோனா வைரஸுடன் வாழ பழங்கிக்கொள்ளுங்கள் என்று அரசு தெரிவித்து வருகிறது. கொரோனாவுக்கு பிந்தைய உலகம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. தற்போது முகக்கவசம் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. இதன் காரணமாக பலரும் வித்தியாசமான புதிய வடிவில் … Read more

மதுரை மாவட்டத்தில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிப்பு!

முகக்கவசங்கள் அணியாமல் வெளியே வந்த 1762 பேர் மூலம் 1,83,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில், 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவில், சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது தேவைகளுக்காக வெளியே வரும் போது, கண்டிப்பாக … Read more

இன்று முதல் ஸ்பெயினில் முக கவசம் அணிவது கட்டாயம்!

இன்று முதல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும், 5,090,064 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், 329,732 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பில், ஸ்பெயின் 4-வது இடத்தில உள்ள நிலையில், இதுவரை ஸ்பெயினில் 279,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27,888 பேர் உயிரிழந்துள்ள … Read more

நேற்று மதுரையில் முகக்கவசம் அணியாத 500 பேருக்கு ரூ.59,800 அபராதம்.!

நேற்று மட்டும் மதுரையில் முகக்கவசம் அணியாத 500 பேருக்கு ரூ.59,800 அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில், நேற்று  மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதித்தோரின் எண்ணிக்கை  13,191 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பொது … Read more

மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.12 லட்சம் செலவில் உதடு மறைவற்ற மாஸ்க் .!

12 லட்சம் செலவில் 13500 செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்காக 81000 உதடு மறைவற்ற முகக்கவசம் வழங்கப்படுகின்றன. செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் உடன் அவர்களது பெற்றோர்கள், பாதுகாவலர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆகியவர்கள் தகவலை பரிமாற்றம் செய்வதற்கு முக்கியமாக பயன்படுவது உதடு அசைவு .  செவித்திறன் மற்றும் வாய் பேச இயலாதவர்கள் உதடு அசைவு மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்நிலையில் வைரஸ் தொற்று காரணமாக … Read more

12 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் தயாரிப்பு – நிர்மலா சீதாராமன்

12 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் ரூ.3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்தார்.  இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்து 2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். … Read more

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1-க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம்!

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1-க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம். தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை, 8ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க,  பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வெளியில் வரும் போது, கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் முதல்முறையாக முககவச தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தை திருப்பூர் … Read more

சாலையில் வெடித்து சிதறிய இலவம் பஞ்சுகள்! அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள்!

சாலையில் வெடித்து சிதறிய இலவம் பஞ்சுகளால் சிரமத்திற்கு உள்ளான வாகன ஓட்டிகள். கோடைகாலம் துவங்கியுள்ள  நிலையில், புதுச்சேரி-கடலூர் சாலையில் மரப்பாலம் சந்திப்பில் உள்ள இலவம் பஞ்சு மரங்கள் காய்கள் காய்த்து தொங்குகின்றன. இதனையடுத்து, அந்த பகுதியில் காலையில் பலத்த காற்று வீசியுள்ளது.  இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள இலவம் பஞ்சு மரங்களில் உள்ள காய்கள் வெடித்து சிதறியதில், சாலை முழுவதும் பஞ்சாக பரவி காணப்பட்டுள்ளது. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி  உள்ளனர். இந்நிலையில், கொரோனா … Read more