ரேஷன் கடைகளில் விலையில்லா முகக்கவசம் வழங்க முதல்வர் பரிசீலினை.!

ரேஷன் கடைகளில் விலையில்லா முகக்கவசம் வழங்க முதல்வர் பரிசீலினை.!

கொரோனா வைரஸை தடுக்க ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்க பரிசீலினை செய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களை தவிர்த்து, பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்றும் வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொது விநியோக திட்டத்தில் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றதாக கூறியுள்ளார். 

இதையயடுத்து, மக்கள் நெருக்கம் காரணமாக சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை மக்களில் கோரிக்கையை ஏற்று பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றியும், அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே வைரஸில் இருந்து முழுமையாக வெளிவர முடியும். அதுமட்டுமில்லாமல் மக்கள் தனிமனிதா இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸை தடுக்க ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்க பரிசீலினை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube