இன்று முதல் ஸ்பெயினில் முக கவசம் அணிவது கட்டாயம்!

இன்று முதல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும், 5,090,064 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், 329,732 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பில், ஸ்பெயின் 4-வது இடத்தில உள்ள நிலையில், இதுவரை ஸ்பெயினில் 279,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27,888 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 370,812 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.

ஸ்பெயினில் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சற்று தளர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் நடமாட தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில், இன்று முதல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் மேலும் அதிகரிப்பதை தடுக்கும் விதமாக அந்நாட்டு அரசு, 6 வயது முதல் அனைத்து வயது மக்களும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் வலியுறுத்தி உள்ளது.

மேலும், சமூக விலகலை கடைப்பிடிக்க முடியாத பொது இடங்களில் முக கவசம் அவசியமாக்கப்பட்டுள்ள நிலையில், மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.