12 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் தயாரிப்பு – நிர்மலா சீதாராமன்

12 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் தயாரிப்பு – நிர்மலா சீதாராமன்

12 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் ரூ.3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்தார். 

இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்து 2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். இன்றைய அறிவிப்புகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘12,000 சுயதொழில் குழுக்கள் 3 கோடி முக உரைகளை தயாரித்துள்ளது. மேலும், 1லட்சத்து 20000 லிட்டர் சனிடைசர் களை இந்த சுய உதவிக்குழுக்கள் தயாரித்துள்ளது.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube