சரியான வயதில் திருமணம் செய்யவில்லை என்றால் இவ்வளவு பிரச்சனையா!!

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவர்களுக்கான சரியான வயதில் திருமணம் செய்தால் தான் அவர்களது இல்லற வாழ்கை சிறப்பாக இருக்கும். குழந்தை பெறுவதிலும் எந்த சிரமமும் இருக்காது.முதலில் அவர்களது வயதினை சரியாக தீர்மானிக்க வேண்டும். பெண்கள் கருத்தரிக்க ஏற்ற சரியான வயது என தீர்மாணிக்கும் அதே நேரத்தில், ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். வயதான பெண்களுக்கு கருவுறும் திறன் குறைவது போல தான் ஆண்களுக்கும் வயதாகும் போது கருவுறுதல் திறன்  … Read more

வைரலாக பரவிவரும் நடிகை அதுல்யாவின் புகைப்படம்!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் நடிகைகளில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் .   அவர் தற்போது நடித்துவரும் நாடோடிகள் படத்தின் ஷூட்டிங்கில் தான் அவருக்கு திருமணம் நடப்பது போன்ற சீன் இன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை அதுல்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.அது அனைவராலும் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. சமுத்திரக்கனி இயக்கும் இந்த படத்தில் அஞ்சலி சசிக்குமார் லீட் ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.  

பிரபல RJவை திருமணம் செய்த நடிகர் ரமேஷ் திலக்…!!

நடிகர் விஜய் சேதுபதியுடன் சூது கவ்வும்,அருள் நிதியுடன் டிமாண்டி காலணி,கக்கா முட்டை போன்ற படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் ரமேஷ் திலக்.இவர் பிரபல தனியார் வானொலியில் RJ-வாக இருந்த நவலக்ஷ்மி என்பவரை இன்று(04-03-2018) திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் திருமணம் சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்றது. இவர்களது திருமண நிகழ்வில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

திருமண சான்று பெற மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்றிதழை கட்டாயமாக்க கோரிய வழக்கு…!!

இனி புதிதாக திருமணம் ஆகும் புதுமண தம்பதிகள் திருமண பதிவு அலுவலகத்தில் பதிந்து திருமண சான்று பெற மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்றிதழை கட்டாயமாக்க கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க  உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மதுரையில் ஜப்பானை சேர்ந்த ஜோடி யூடோ, சிகாரு இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்..!

  இந்தியாவின் தமிழகத்திற்கு சுற்றுலா வந்த ஜப்பானிய தம்பதியனருக்கு தமிழர் கலாச்சாரம் மற்றும் இந்து மத கலாச்சாரம் என்பது மிகவும் பிடித்து போனது.இத்தகைய கலாச்சாரங்களால் கவரப்பட்ட ஜப்பான் ஜோடி யூடோ, சிகாரு மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். வேஷ்டி, சேலை அணிந்து உறவினர்கள் உற்சாகமாக அந்த திருமண விழாவில் பங்கெடுத்தனர்.

நடிகை பாவனாவின் திருமண தேதியில் மீண்டும் அதிரடி மாற்றம்….!

  நடிகை பாவனா தன் நண்பரான நவீன் என்பவரை காதலித்து வந்தார். கேரளாவை சேர்ந்த நவீன் படங்களை தயாரித்து வந்தார். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை தொடர்ந்து நடிகை பாவனா கடத்தப்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்தார். இந்நிலையில், இந்த டிசம்பர் 22 ல் இவர்களுக்கு திருமணம் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது திருமணம் இல்லையாம். வரும் 2018 ஜனவரி 22 ல் தான் திருமணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களுக்கிடையே … Read more

நடிகை பாவனாவிற்கு டிச 22ஆம் தேதி டும் டும்…!

இந்த வருடத்தில் மக்களை அதிர்ச்சியாக்கிய நிகழ்வில் ஒன்று நடிகை பாவனாவிற்கு நடந்த அநியாயம். அதற்கு காரணமான நடிகரும் தற்போது சிறையில் உள்ளார். பாவனாவிற்கும் அவரது நீண்ட நாள் காதலரும்,கன்னட திரைப்பட தயாரிப்பாளருமான நவீன் என்பவருக்கும் கடந்த மார்ச் 9ம் தேதி மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதனை தொடர்ந்து தற்போது, இவர்களுக்கு வரும் டிசம்பர் 22ம் தேதி உறவினர்கள் மத்தியில் திருசூரில் திருமணம் நடக்க இருக்கிறதாம். திருமண விழாவும் நிச்சயதார்த்தம் நடந்தது போல் மிகவும் எளிமையான … Read more

ஸ்ருதியின் காதலை ஏற்ற சரிகா-விரைவில் திருமணம்⁉

  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்துவந்த ஸ்ருதிஹாசன் தற்போது பட வாய்ப்புகள் ஏதுமில்லாமல் உள்ளார். இந்நிலையில் அவர் லண்டனைச் சேர்ந்த அவரது காதலர் மைக்கேல் கார்சலை தன் அம்மாவான சரிகாவிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். சரிகாவும், பூங்கொத்து கொடுத்து கார்சலை வரவேற்றுள்ளார். இந்நிலையில், இது ஸ்ருதியின் திருமணம் குறித்து நடந்த சந்திப்பு என்றும், விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

திருமணம் கிடையாது ஆனால் அதுமட்டும் ஓகே

நாயகிகளின் திருமணம் எப்படி நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவர். ஆனால் நடிகை லேகா வாஷிங்டன் ஒரு வித்தியாசமான திருமணம், அதை திருமணம் என்று சொல்ல முடியாது, ஒரு விஷயத்தை செய்துள்ளார். ஓகே கண்மணி படத்தில் வருவது போல  இதுநாள் வரை லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த லேகா DIY Partnership என்ற முறையில் திருமணம் போல் ஒரு முறையில் தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துள்ளார். அதற்காக விழா அண்மையில் உறவினர்கள் … Read more