திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு புது விளக்கம் அளித்த மம்தா பானர்ஜி!

திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு மும்மதங்களையும் சுட்டி காண்பித்த்து மம்தா பானர்ஜி புது விளக்கம் அளித்துள்ளார். அடுத்த ஆண்டு கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி அவர்களும் கோவாவில் முகாமிட்டு கட்சித் தொண்டர்களிடம் பேசி வருகிறார். அப்போது பேசிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். … Read more

தேசிய கீதம் அவமதிப்பு : மேற்கு வங்க முதல்வர் மீது புகார்!

தேசிய கீதத்தை அவமதித்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜக தலைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் சுற்றுப்பயணமாக மும்பை சென்றுள்ளார். நேற்று மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதாகவும், ஆனால் மம்தா உட்கார்ந்து கொண்டு இருந்ததாகவும், சில வினாடிகள் கழித்துதான் எழுந்து நின்றார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பாதி … Read more

பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா சந்திப்பு …!

பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி வந்துள்ளார். டெல்லி சென்று பிரதமர் மோடி அவர்களை சந்தித்து திரிபுரா பிரச்சனை குறித்தும், மாநிலத்தில் உள்ள பிரச்சினை குறித்தும் நிச்சயம் பேசுவேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பிரதமர் மோடி அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த … Read more

நாளை பிரதமரை சந்திக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி …!

நாளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் 4 நாள் சுற்றுப்பயணமாக நாளை டெல்லி செல்ல உள்ளார். இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் இது தொடர்பாக மம்தா பானர்ஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்பொழுது பேசிய அவர், பாஜக ஆட்சியில் ஜனநாயகம் எலும்புக்கூடாக உள்ளதாக கூறியுள்ளார். மாநிலங்களின் முயற்சியை மத்திய அரசு கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனவும், 4 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி … Read more

திரிபுராவில் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது – மேற்கு வங்க முதல்வர்!

திரிபுராவில் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மேற்கு வங்க தலைவர் சயனி கோஷ் அவர்கள் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார். அப்போது முதல்வர் பிப்லப் தேவை கடுமையாக … Read more

வீடு தேடி ரேஷன் திட்டம் ஊழியர்களுக்கு ஒரு நாள் நோபல் பரிசு வழங்கப்படும் – மேற்கு வங்க முதல்வர்!

வீடு தேடி ரேஷன் திட்டத்தின் ஊழியர்களுக்கு ஒரு நாள் நோபல் பரிசு வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் துவார ரேஷன் எனும் வீடு தேடி செல்லும் ரேஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக 10 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவார்கள் எனவும், இனி … Read more

நாட்டிலுள்ள அனைத்து பயங்கரவாதிகளுக்கும் தாய் மம்தா – பாஜக எம்பி சௌமித்ரா கான்!

நாட்டிலுள்ள அனைத்து பயங்கரவாதிகளுக்கும் தாய் முதல்வர் மம்தா பானர்ஜி தான் என பாஜக எம்பி சௌமித்ரா கான் கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை 15 கிலோ மீட்டரில் இருந்து 50 கிலோ மீட்டராக விரிவுபடுத்த கூடிய மத்திய அரசின் நடவடிக்கையில் தலையிட்டு வாபஸ் பெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இந்த கடிதம் தொடர்பாக பாஜக எம்.பி … Read more

மக்களின் ஆசியுடன் வங்க தேசத்தை உயரத்திற்கு கொண்டு செல்வோம் – மம்தா பானர்ஜி!

மக்களின் ஆசியுடன் வங்க தேசத்தை உயரத்திற்கு கொண்டு செல்வோம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 4 வங்காள சட்டமன்ற தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெற்ற நிலையில் இதற்கு வாழ்த்து தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெற்றி பெற்ற நான்கு வேட்பாளருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்கள் … Read more

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ்.!

இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்,தற்போது கோவாவில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு கோவா தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோவாவிலும் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று வருகிறார்.இதற்காக,மம்தா கோவாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இதற்கிடையில், மாநிலத்தின் பல தலைவர்கள் மற்றும் பிற மக்கள் திரிணாமுல் கட்சியில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில்,இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்,தற்போது கோவாவில் திரிணாமுல் காங்கிரஸில் (டிஎம்சி) இணைந்துள்ளார்.18 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான … Read more

#Breaking:எம்.எல்.ஏ. ஆக பதவியேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமீருல் இஸ்லாம் மற்றும் ஜாகிர் ஹொசைன் ஆகியோர் தற்போது எம்எல்ஏவாக பதவியேற்றனர். முன்னதாக நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.ஆனால்,நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியுற்றாா்.இருப்பினும், மேற்கு வங்க முதல்வராக அவா் பதவியேற்றாா்.இதனால்,பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்கிடையில்,பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து,பவானிபூர் தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு,அத்தொகுதியில் முதல்வர் மம்தா … Read more