திரிபுராவில் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது – மேற்கு வங்க முதல்வர்!

திரிபுராவில் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மேற்கு வங்க தலைவர் சயனி கோஷ் அவர்கள் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்.

அப்போது முதல்வர் பிப்லப் தேவை கடுமையாக சாடி மிரட்டும் தோணியில் பேசியதாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமாகிய மம்தா பானர்ஜி அவர்கள், திரிபுராவில் அராஜகம் ஆட்சி செய்வதாகவும், மக்கள் வெளிப்படையாக கத்திகள் மற்றும் குச்சிகளுடன் சுற்றிதிரிகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் 3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல உள்ள நிலையில் பிரதமரிடம் வலுக்கட்டாயமாக திரிபுரா பிரச்சனை குறித்து நான் பேசுவேன் எனவும் மம்தா பானர்ஜி அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal