ஆதீனம் ஆன்மீக மடமா.? வியாபார நிறுவனமா.? மதுரை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.! 

மதுரை ஆதீனம் ஆன்மீக மடமாக செயல்படுகிறதா.? அல்லது வியாபார நிறுவனமாக செயல்படுகிறதா என மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  மதுரை ஆதீனத்திற்கு சொத்தான இடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில், மதுரை ஆதீனத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் இருக்கின்றன. அந்த சொத்துக்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆதீனத்திற்கு சொந்தமான சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் … Read more

சட்ட விரோத குவாரிகள்.. தமிழக அரசுக்கு ஒரு வாரம் கெடு.! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு.!

சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள நடடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.   சட்டவிரோதமாக குவாரிகள் அமைக்கப்பட்டோ, அல்லது அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிக அளவிலோ மண்வள கனிமங்கள் எடுக்கப்படுவது அவ்வப்போது நடைபெற்று தான் வருகிறது. இதுகுறித்து, உயர்நீதிமன்றம் இன்று தானாக முன்வந்து வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முக்கிய உத்தரவை தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது. அதாவது, சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளை … Read more

கொலை வழக்குக்களை விசாரிக்க தனி பிரிவை நியமிக்க வேண்டும்- உயர்நீதிமன்றகிளை பரிந்துரை.!

கொலை வழக்குகளை விசாரிக்க காவல் பிரிவில் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். அப்போது தான் காவல்துறையினருக்கு வேலைப்பளு குறையும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது.    தமிழகத்தில் தற்போது கொலை வழக்குகளை விசாரிக்க காவல்துறை பிரிவினரில் சட்டம் ஒழுங்கு பிரிவினர் தான் அந்த கொலை வழக்குகளை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து, இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. அதாவது, கொலை வழக்குகளை விசாரிக்க தனி காவல் பிரிவு உருவாக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு … Read more

ரத்தம் தெறிக்கும் ஃப்ரீ ஃபயர்… தடை செய்ய முடியவில்லை.! உயர்நீதிமன்றம் வேதனை.!

ஃப்ரீ ஃபயர் ஆன்லைன் விளையாட்டில் அதிகமாக ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குழந்தைகளை பாதிக்கும் வகையில் இருக்கின்றது என மதுரை உயர்நீதிமன்ற கிளை வேதனை தெரிவித்துள்ளது.  ஆன்லைன் விளையாட்டுக்கு தற்காலத்து இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தான் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை கேட்டு குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில், இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த ஆன்லைன் விளையாட்டு, குறிப்பாக ஃப்ரீ ஃபயர் விளையாட்டு குறித்து கருத்து … Read more

அரசு நிலத்தில் உள்ள மரங்களை வெட்டினால் வழக்கு போடுங்கள்.! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி.! 

அரசு நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை. மீறினால் வழக்கு பதியப்படும். – மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.  அரசு நிலத்தில் எந்தவித அனுமதியுமின்றி மரங்களை வெட்ட கூடாது எனவும் , அதே போல, அதனையும் மீறி மரம் வெட்டினால் வழக்கு போடுங்கள் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி அருகே இருக்கும் குடகனாறு கால்வாயில் உள்ள மரங்களை சிலர் வெட்டி அழித்துவிட்டதாக மதுரை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு … Read more

அவசர தேவை என நிலத்தை பறிப்பது தவறு.! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து.!

உரிய முறைப்படி வசித்து வரும் குடியிருக்கும் வாசிகள் நிலங்களை அவசரகால உத்தரவு என அவர்களின் நிலங்களை கையகப்படுத்துவது தவறு- மதுரை உயர்நீதிமன்றம் கருத்து. தஞ்சாவூரில் விமான படை பயிற்சி தளம் அமைப்பதற்காக, தேவைப்பட்ட அப்பகுதி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக மாற்று இடம் கேட்டு, நிலத்தை கொடுத்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக, அவசரகால தேவை என ஏற்கனவே குடியிருக்கும் குடியிருப்புவாசிகளின் நிலங்களை கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்து இருந்தார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர். இதனை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டிருந்தது. … Read more

கடவுள் முன் அனைவரும் சமம்.! யாருக்கும் முதல் மரியாதை கிடையாது.! உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு.!  

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் கோவில் திருவிழா தொடர்பான வழக்கில், ‘ கடவுள் முன் அனைவரும் சமம். யாருக்கும் முதல்மரியாதை என்பது கிடையாது.’ என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கோவிலில் குறிப்பிட்ட சிலர் முதல் மரியாதை கேட்டு தகராறு செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில், குலமங்கலம் எனும் கிராமத்தில் உடையபராசக்தி அம்மன் கோயில் … Read more

அவரவர் விரும்பும் மதத்தை வழிபட உரிமை உண்டு.! மதுரை உயர்நீதிமன்றம் கருத்து.!

அவரவர் விரும்பும் மதத்தை வழிபட நம் நாட்டில் அனைவரும் உரிமை உண்டு என மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.  மதுரை உயர்நீதிமன்றம் இன்று ஓர் முக்கிய கருத்தை மக்களுக்கு தெரியபடுத்தியது. அதாவது இந்தியா ஓர் மதசார்பற்ற சுதந்திர நாடு. இங்கு யார் எந்த மத கடவுளை வேண்டுமானால் வழிபடலாம். அல்லது கடவுள் இல்லை என்ற கொள்கையோடும் இருக்கலாம். அதனை குறிப்பிட்டு , அவரவர் விரும்பும் மதத்தை வழிபட , நம் நாட்டில் அனைவருக்கும் உரிமை உண்டு. … Read more

#BREAKING : சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.   சமூக வலைதளத்தில் பிரபலமான அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒரு  யூ-டியூப் சேனலுக்கு  அளித்த பேட்டி ஒன்றில்  பேசுகையில், ‘ நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது’ என அவர் கருத்து கூறியிருந்தார். அவர் கூறிய கருத்துக்கு எதிராக நீதிமன்றம் தானாக முன்வந்து குற்றவியல் வழக்கு பதிவு செய்தது … Read more

நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு.! அதிகாரிகள் மெத்தனம்.! உயர்நீதிமன்றம் கருத்து.!

தூத்துக்குடி, விளாத்திகுளம், கல்லாறு ஓடை பகுதி புறம்போக்கு ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் தூத்துக்குடி கலெக்டர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பேரூராட்சி பகுதியில் இருக்கும்  கல்லாறு ஓடை பகுதிகளில் உள்ள புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிக்கபட்டதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பான வழக்கு , மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கானது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த … Read more