ஆதீனம் ஆன்மீக மடமா.? வியாபார நிறுவனமா.? மதுரை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.! 

மதுரை ஆதீனம் ஆன்மீக மடமாக செயல்படுகிறதா.? அல்லது வியாபார நிறுவனமாக செயல்படுகிறதா என மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

மதுரை ஆதீனத்திற்கு சொத்தான இடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில், மதுரை ஆதீனத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் இருக்கின்றன.

அந்த சொத்துக்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆதீனத்திற்கு சொந்தமான சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் சுமார் 1000 ஏக்கர் நிலமானது புதுச்சேரி தனியார் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது என வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அமர்வு, ‘ மதுரை ஆதீன மடம், ஆன்மீக மடமாக செயல்படுகிறதா? அல்லது வியாபார நிறுவனமாக செயல்படுகிறதா என கேள்வி எழுப்பினர்.

மேலும், மதுரை ஆதீனம் , இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அப்படி இருக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதுகுறித்து ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.

இந்த சட்டவிரோதமாக ஒத்திகைக்கு விடப்பட்ட நிலங்கள் குறித்த முறைகேடுகளை விசாரிக்க மதுரை மாவட்ட ஆட்சியர் ஒரு குழுவை அமைத்து, அதன் அறிக்கையினை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை வரும் அக்டோபர் 28ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment