மார்ச் 8 -ஆம் தேதி வரை மக்களவை ஒத்திவைப்பு

மக்களவை மார்ச் 8 -ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதனையடுத்து பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்ந்து நடைபெற்று வந்தது.இந்நிலையில் முதற்கட்ட அமர்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து மக்களவை மார்ச் … Read more

பிரதமர் தொடங்கிய சீர்த்திருத்தங்களின் அடிப்படையில‍ேயே பட்ஜெட் தாக்கல் – நிர்மலா சீதாராமன்

நீண்டகால வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.பின் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய … Read more

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்து தமிழகம் வெற்றி நடைபோடும் – ரவீந்திரநாத்

அதிமுக-பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என்று  அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் இன்று பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிமுகவே தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்தபோது ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்டு தற்போது தமிழகம் வந்து … Read more

பெட்ரோல் ,டீசல் விலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம்

பெட்ரோல் ,டீசல் விலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரக்கோரி நோட்டீஸ் கொடுத்துள்ளார். ஜனவரி 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  தொடங்கியது.  ஜனவரி 29 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை 2-வது அமர்வும் நடைபெறுகிறது.கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. … Read more

#BREAKING: தமிழகத்தில் 5 இடங்களில் புதிய விமான நிலையங்கள் – மத்திய அரசு

தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒத்துக்காட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில், கேள்வி நேரத்தில் தமிழகத்தில் விமான சேவைகள் விரிவாக்கம் குறித்து திமுக எம்பி வில்சன் எழுப்பிருந்தார். இதற்கு பதில் கூறிய மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சர் ஹர்தீப் சிங், தமிழகத்துக்கு ரூ.195 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி 5 இடங்களில் விமான சேவையை விரிவாக்கம் செய்வதற்கும், விமான நிலையம் புதுப்பிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். அதன்படி, தஞ்சை, … Read more

தொடர் அமளி: மாநிலங்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு – வெங்கையா நாயுடு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவையை நாளை காலை வரை ஒத்திவைத்தார் வெங்கையா நாயுடு.  டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் தலைவர் வெங்கையா நாயுடு தலமையில் இன்று தொடங்கியது. அப்போது வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு மாநிலங்களவை வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்ததால், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் தொடர் அமளியில் எதிரிக்கட்சியினர் ஈடுபட்டதால் இருமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தொடங்கப்பட்ட … Read more

ஜன. 29ல் அனைத்துக் கட்சி கூட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

மக்களவை அனைத்து கட்சி கூட்டம் ஜன. 29-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மக்களவையில் 2021- 22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்த விளக்க உரை இரண்டு அமர்வுகளில் நடைபெறும் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, ஜன.29 முதல் பிப்ரவரி 15 வரை மற்றும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 … Read more

மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதாவை நிறைவேற்றம் ..!

மக்களவையில் நேற்று ஒரு மசோதாவை நிறைவேற்றியது. இதன் கீழ் காஷ்மீர், டோக்ரி மற்றும் இந்தி, தற்போதுள்ள உருது மற்றும் ஆங்கிலம் தவிர, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதா, 2020 உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியால் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஒருசிறிய  விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. உள்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கூறுகையில், ஜம்மு-காஷ்மீர் மக்களின் கோரிக்கையாக, அவர்கள் … Read more

#BREAKING: மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

விவசாய சீர்திருத்த மசோதா தொடர்பான கலந்துரையாடலின் போது, ​​சபையில் சலசலப்பை ஏற்படுத்தியதற்கும், துணை சபாநாயகருடன் தவறாக நடந்து கொண்டதற்கும் அவர்களை சபாநாயகர் வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்தார். மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் நேற்றிரவு முதல் காந்தி சிலைக்கு முன்னால் ஒரு தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், தர்ணாவை திரும்பபெற்றனர்.  இந்நிலையில், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.  

உளவுத்துறையினர் எனும் பெயரில் மிரட்டல் – மக்களவை சபாநாயகரிடம்  எம்.பி. கதிர் ஆனந்த்  புகார்

உளவுத்துறையினர் எனும் பெயரில் சிலர் அத்துமீறி நுழைந்து மிரட்டினர் என்று திமுக  எம்.பி. கதிர் ஆனந்த்  புகார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 14- ஆம் தேதி முதல் தொடங்கி விடுமுறையின்றி அக்டோபர் 1-ஆம் தேதிவரை நடைபெறும் எனவும், கொரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.அதன்படி … Read more