#BREAKING: மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

விவசாய சீர்திருத்த மசோதா தொடர்பான கலந்துரையாடலின் போது, ​​சபையில் சலசலப்பை ஏற்படுத்தியதற்கும், துணை சபாநாயகருடன் தவறாக நடந்து கொண்டதற்கும் அவர்களை சபாநாயகர் வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்தார்.

மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் நேற்றிரவு முதல் காந்தி சிலைக்கு முன்னால் ஒரு தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், தர்ணாவை திரும்பபெற்றனர்.  இந்நிலையில், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

 

author avatar
murugan