யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி!

yash fans death

கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் பலரும் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பேனர் வைப்பது என கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் 3 ரசிகர்கள் யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு பேனர் வைக்கும் வேளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது … Read more

கேஜிஎப் 3 நிச்சயமாக வரும் ராக்கி பாய் இருப்பார்! அதிரடி அப்டேட் விட்ட பிரசாந்த் நீல்!

kgf 3

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படங்கள் கேஜிஎப் 1 மற்றும் கேஜிஎப் 2 ஆகிய படங்களை சொல்லலாம். இதில் கேஜிஎப் 1  திரைப்படம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியானது. படம் அருமையாக இருந்த காரணத்தால் படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த முதல் பாகம் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்ததிருந்தது. முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து … Read more

ராக்கியின் அடுத்த ஆட்டத்திற்கான பூஜை தொடங்கியது!! கே.ஜி.எஃப் 2 அப்டேட்!!!

கன்னட சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் கே.ஜி.எஃப் இப்படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் பாலிவுட் முக்கிய நடிகர் நடிக்க உள்ளார். தென்னிந்திய சினிமா சமீப வருடங்களாக உலக சினிமா அளவிற்கு பிரமாண்டத்தையும், கதைகளங்களையும் உருவாக்கி வெற்றி அடைந்து வருகிறது. எந்திரன், பாகுபலி 1 & 2, 2.O என தொடங்கி கன்னட சினிமாவில் தற்போது கே.ஜி.எஃப் என பிரமாண்டமும், அதற்கேற்ற கதைகளமும் பார்ப்பவர்களை மிரள செய்கிறது. அப்படி சென்ற ஆண்டு வெளியாகி இந்திய சினிமா … Read more

பாகுபலி-2 வசூலை மிஞ்சிய கன்னட பிரமாண்டம் ‘கே.ஜி.எஃப்’!

தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி சீரிஸ் 1 & 2 திரைப்படம் ஆந்திரா, தெலுங்கானா, கராநாடகா என மூன்று மாநிலங்களிலும் வசூலை குவித்தது. இதனை கன்னடத்தில் பிரமாண்டமாக உருவான கே.ஜி.எஃப் திரைப்படம் தற்போது முறியடித்துள்ளது. இந்த படம் இதுவரை கர்நாடகாவில் மட்டுமே 120 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் அதிக வசூலை ஈட்டிய பாகுபலி 2 வசூலை தாண்டியுள்ளது. இந்த படத்தை நம்ம தளபதி விஜய் பார்த்து வியந்து … Read more

கே.ஜி.எஃப் படத்தை பார்த்து வியந்து பாராட்டிய தளபதி விஜய்!!

தென்னிந்திய சினிமாவில் சமீப காலமாக பிரமாண்ட படங்கள் தயாராகி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு ஆகச்சிறந்த உதாரணங்கள் பாகுபலி 1 & 2, 2.O, கே.ஜி.எஃப் என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.  அதில் கே.ஜி.எஃப் படம் கன்னடத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கன்னட ஹீரோ யாஷ் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை சமீப்த்தில் தளபதி விஜய் பார்த்துள்ளார். இதனை பார்த்து, காதாப்த்திர தேர்வு அருமையாக இருந்ததாகவும், படமாக்கப்பட்ட விதமும் நன்றாக … Read more

கே.ஜி.எஃப் மான்ஸ்டர் ஹிட்!! 100 கோடி வசூலை கடந்து சாதனை!!!

கன்னட ஹீரோ யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக தயாரன திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிரமாண்டமாக தயாராகி வெளியான திரைப்படம். இப்படம் வெளியான அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் தமிழில் கடுமையான போட்டிகளுக்கு இடையே விஷால்  வெளியிட்டார்.  தற்போது தியேட்டர் எண்ணிக்கையும், காட்சிகளும் அதிகரித்து வருகிறது. இந்த படம் உலக அளவில் தற்போது 100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்து உள்ளது. DINASUVADU