கேஜிஎப் 3 நிச்சயமாக வரும் ராக்கி பாய் இருப்பார்! அதிரடி அப்டேட் விட்ட பிரசாந்த் நீல்!

கேஜிஎப் 3 நிச்சயமாக வரும் ராக்கி பாய் இருப்பார்! அதிரடி அப்டேட் விட்ட பிரசாந்த் நீல்!

kgf 3

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படங்கள் கேஜிஎப் 1 மற்றும் கேஜிஎப் 2 ஆகிய படங்களை சொல்லலாம். இதில் கேஜிஎப் 1  திரைப்படம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியானது. படம் அருமையாக இருந்த காரணத்தால் படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த முதல் பாகம் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்ததிருந்தது. முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து படத்திற்கான இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இரண்டாவது பாகம் முதல் பாகத்தை விட பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இரண்டாவது பாகத்தின் மீது பெரிய எதிர்பார்புகளே இருந்தது.

இந்த இரண்டாவது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கேஜிஎப் 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இருந்த காரணத்தால் படம் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

என்னால் முடிந்தது 2 லட்சம்…200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிதியுதவி செய்த KPY பாலா.!

இரண்டாவது பாகம் முடியும் கடைசி காட்சியிலேயே படத்தின் மூன்றாவது பாகம் உருவாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன் பிறகு அந்த படம் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸ் வைத்து சலார் படத்தை இயக்க சென்று சலார் படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு பிரசாந்த் நீல் ஜூனியர் என்டிஆர் வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்தை இயக்கி முடித்த பிறகு கேஜிஎப் 3 படத்தை தொடங்குவார் என கூறப்படுகிறது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் நீல் ” கேஜிஎப் 3 திரைப்படம் நிச்சியமாகி வரும். கண்டிப்பாக அந்த மூன்றாவது பாகத்தில் யாஷ் நடிப்பார்.

நான் தற்போது ஜூனியர் என்டிஆர் படத்தை வைத்து இயக்கி வருகிறேன். அந்த திரைப்படத்தை இயக்கி முடித்த பிறகு  நான் கேஜிஎப் 3 படத்தை இயக்குவேன்” எனவும் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். மேலும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் திரைப்படம் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube