பிரமாண்ட கூட்டணியுடன் சைக்கோவாக களமிறங்கும் மிஷ்கின்

தனது வித்தியாசமான படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் மிஷ்கின். இவர் அடுத்ததாக பிரமாண்ட கூட்டணியுடன் களமிறங்குகிறார். அந்த படத்தின் பெயர் சைக்கோ என வைத்துள்ளார். இதில் இளையராஜா இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் ராம், அதிதி ராவ் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதன் படபிடிப்பு இன்று முதல் துவங்க உள்ளது. DINASUVADU

யுவன் பிறந்தநாளில் விஷால் செய்யும் செயல் : யுவன் பர்த்டே ஸ்பெஷல்!!

இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா தனது 39வது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ளார். இவர் தனது 17வது வயதினிலே சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிவிட்டார். தனது தனித்துவமான இளைமையான இசையால் இளைஞர்களை தன் இசையால் கட்டிபோட்டவர்.  இவரது இசைக்காக மட்டுமே பல படங்கள் ஓடியுள்ளன. இந்நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துவரும் சண்டகோழி 2 படத்தின் கம்பத்து பொண்ணு எனும் ஒரு பாடல் நாளை யுவன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட … Read more

பாலாவின் 'நாச்சியார்' பட வெளியீடு ஒத்திவைப்பு

பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘நாச்சியார்’. இப்படத்தில் ஜோதிகா ஒரு தைரியம் வாய்ந்த பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியாக இருந்தது. அனால் இப்பொழுது சில காரணத்தினால் பட வெளியீட்டை படக்குழு ஒரு வரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்போது இப்படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது