அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்துக என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமல்படுத்தும் வகையில் திருத்தங்களை கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரசு பணியில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி 2016-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனடிப்படையில் 30% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீதம் போட்டியிடும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த … Read more

ஆண்டுக்கு 2 கோடி.. இப்படிதான் 8 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் ஏமாற்றப்பட்டனர் – ராகுல்

வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை உருவாக்குவதில் பிரதமர் மோடி வல்லவராக இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம். நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில், அனைத்துத்துறை அமைச்சகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் … Read more

#JustNow: தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை – எதிரான மனு தள்ளுபடி!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டதிருத்தத்திற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புழல் உதவி சிறை அதிகாரி ஷாலினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். 10ம் வகுப்புவரை தமிழிலும், 11, 12ம் வகுப்பை கேரளாவில் ஆங்கில வழி கல்வியில் படித்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே, அரசியல் சட்டத்திருத்தம் தங்களை போன்றோரின் அடிப்படை … Read more

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி.. 3 பேர் மீது குண்டாஸ் – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

பிற மாநிலம் உள்பட பல்வேறு இடங்களில் போலி ஷிப்பிங் நிறுவன மோசடி பெரிய அளவில் நடந்துள்ளது என சென்னை காவல் ஆணையர் குற்றசாட்டு. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 கோடி மோசடி செய்த 3 பேர் மீது குண்டாஸ் சட்டம் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறுவோரிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை … Read more

வேலை வாய்ப்பிற்காக காத்திருப்போர் பட்டியல் – தமிழ்நாடு அரசு வெளியீடு

தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், வேலைக்காக தங்கள் சான்றிதழ்களை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், தமிழகம் முழுவதும் 76 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில், 2022-04-30 வரை வேலை வாய்ப்பிற்காக பதிவுதாரர்களது விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசு வேலைக்காக பதிவு செய்யப்பட்டவர்களில் ஆண்கள் 35,67,000 பேர், பெண்கள் 40,67,820 பேர், மூன்றாம் பாலினம் … Read more

அரசு துறையில் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அமைச்சர் தகவல். தமிழக சட்டபேரவையில் தொழில் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது அரசு பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழத்தில் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கால மாற்றத்துக்கு ஏற்ப அரசுத் துறையில் தற்போதிருக்கும் தேவையற்ற பணியிடங்கள் … Read more

புதிய திட்டத்திற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவையில் ஒப்புதல் – பிரகாஷ் ஜவடேகர்

தேசிய பணியாளர் முகமைக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் இந்தியாவில் மத்திய அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை வங்கி பணிகளுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பித்து, 1.25 கோடி பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக பல்வேறு தேர்வாணையங்கள் நடத்தும் பல வகையான தேர்வுகளில் தேர்வாளர்கள் பங்கேற்க வேண்டுயுள்ளது. இந்த நிலையில், இந்த தேர்வுகள் அனைத்தையும் பொதுத்தகுதி தேர்வு என்ற ஒற்றை தேர்வில் தவிர்க்கலாம் என கடந்த … Read more