ஆண்டுக்கு 2 கோடி.. இப்படிதான் 8 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் ஏமாற்றப்பட்டனர் – ராகுல்

ஆண்டுக்கு 2 கோடி.. இப்படிதான் 8 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் ஏமாற்றப்பட்டனர் – ராகுல்

வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை உருவாக்குவதில் பிரதமர் மோடி வல்லவராக இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம்.

நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில், அனைத்துத்துறை அமைச்சகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் பணியமர்த்த தேர்வு செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா காரணமாக பெருமளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, பலர் தங்கள் தொழிலை தொடங்க முடியாமல் அவதியில் உள்ளனர். மேலும், தங்களது வேலைகளை இழந்துவிட்டு புதிய வேலை தேடி வரும் சூழல் நிலவி வருகிறது. இந்த சமயத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு சற்று மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்திருப்பதாக ஒருபக்கத்தில் தெரிவிக்கின்றனர். மறுபக்கத்தில், பிரதமரின் அறிவிப்பை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

அந்தவகையில், நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் பணியமர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அவரது பதிவில், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என 8 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் ஏமாற்றப்பட்டனர், அது இப்போது 10 லட்சமாக மாறியுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை விட, வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை உருவாக்குவதில் பிரதமர் மோடி வல்லவராக இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *