புதிய திட்டத்திற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவையில் ஒப்புதல் – பிரகாஷ் ஜவடேகர்

தேசிய பணியாளர் முகமைக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் இந்தியாவில் மத்திய அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை வங்கி பணிகளுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பித்து, 1.25 கோடி பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக பல்வேறு தேர்வாணையங்கள் நடத்தும் பல வகையான தேர்வுகளில் தேர்வாளர்கள் பங்கேற்க வேண்டுயுள்ளது. இந்த நிலையில், இந்த தேர்வுகள் அனைத்தையும் பொதுத்தகுதி தேர்வு என்ற ஒற்றை தேர்வில் தவிர்க்கலாம் என கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, ஒருவர் பொதுத்தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் அரசாணையற்ற மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பணிகளுக்கு நேரடியாக விண்ணப்பித்து வேலைவாய்ப்பில் பங்கேற்கலாம். இதன்மூலம் மாணவர்களின் செலவும், சுமையும் குறையும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்