“பிரதமரின் மித்ரா கடன் திட்டத்தில் மோசடி” – தமிழகம் முதலிடம்!

பிரதமரின் மித்ரா கடன் வழங்கும் திட்டத்தில் 2,313 கணக்குகளில் மோசடி நடந்துள்ளதாகவும் அதில் தமிழகத்தில் தான் அதிகமாக மோசடி நடந்துள்ளதாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில், பிரதமரின் மித்ரா கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இந்த ஆண்டு 2019 ஜூன் மாதம் 21ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 19 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 3 ஆண்டுகளில் இந்த திட்டத்தில் … Read more

தயாராகிக் கொண்டிருக்கும் மத்திய பட்ஜெட் – கணிப்புகள் என்ன ?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஜூலை 5ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தனது முதல் பட்ஜெட் தயாரிப்பை தாக்கல் செய்கிறார். மோடி இரண்டாம் முறையாக பதவி ஏற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் தொடர் இதுவாகும். இதற்கு முன்னாள் 2018ம் ஆண்டு அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அவர்களும் , 2019 ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை ரயில்வே துறை அமைக்கிற பியூஸ் கோயல் அவர்கள் தாக்கல் செய்தார்.   கடந்த  பிப்ரவரி … Read more

மத்திய பட்ஜெட் தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் – நிதி அமைச்சர் கருத்து !

மத்திய அரசின் நிதி அமைச்சகம் சார்பில் நாட்டிற்கான மொத்த பட்ஜெட் தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நிதி அமைச்சகம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பு நேற்று தொடங்கி தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 5ம் தேதியன்று நாடாளுமன்ற அவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பு  குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், முந்தைய அமைச்சரவையில் பாதுகாப்பு துறையின் அமைச்சராக இருந்த பொழுது எதிர்கொண்ட சவால்களை … Read more

அல்வா குடுத்த அமைச்சர் நிர்மலா !…மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடங்கியது !

மத்திய அரசின்  பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடக்கும் அல்வா குடுக்கும் நிகழ்வு புதுடில்லியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் அல்வா வழங்கினார். ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் நிதி பட்ஜெட் தயாரிக்கும் செய்யும் முன்பு அல்வா குடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.இந்திய கலாச்சாரம் படி எந்த ஒரு நல்ல விஷயம் தொடங்கும் முன்பு இனிப்பு வழங்கப்படும்.அதே போல், இந்த முறை புதிய அமைச்சரவை சார்பில் வரும் … Read more

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் தொடக்கம்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது .தமிழகம் சார்பில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.