தயாராகிக் கொண்டிருக்கும் மத்திய பட்ஜெட் – கணிப்புகள் என்ன ?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஜூலை 5ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தனது முதல் பட்ஜெட் தயாரிப்பை தாக்கல் செய்கிறார். மோடி இரண்டாம் முறையாக பதவி ஏற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் தொடர் இதுவாகும். இதற்கு முன்னாள் 2018ம் ஆண்டு அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அவர்களும் , 2019 ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை ரயில்வே துறை அமைக்கிற பியூஸ் கோயல் அவர்கள் தாக்கல் செய்தார்.
 

கடந்த  பிப்ரவரி மதம் தாக்கல் செய்த  மத்திய பட்ஜெட்டில் மக்களவைத்  தேர்தலுக்காக பல சிறப்பு சலுகைகள் இடம் பெற்று இருந்தன. அதே போல் இந்த முறையும் அதிகமாக இருக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019-20 ம் நிதியாண்டில் வருமான வரி விளக்கு  2.5 லட்சத்தில்  இருந்து 3 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.அதே போல் மத்திய பட்ஜெட்டில் உணவுக்கான மானியத்தை 2.21 லட்சம் கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு, ஜிடிபி சரிவு, நிதி பற்றாக்குறையை சமாளிப்பது என்று பல சவால்கள் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.