விவசாயிகளை சந்திக்க பாஜக தலைவர் 3 நாள் சுற்றுப்பயணம்..!

விவசாயிகளை சந்திக்க தமிழக பாஜக தலைவர் முருகன் மூன்று நாள்  சுற்றுப்பயணம். நாளை முதல் 21-ஆம் தேதி வரை பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவர் சுற்று பயணத்தின் போது வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் விவசாயிகளும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தயுள்ளார் என கூறப்படுகிறது. சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 23-வது நாட்களாக … Read more

#BREAKING: பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆளுநர் மளிகை முற்றுகை..!

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 23-வது நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு பல அரசியல் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர்  பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி  முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இன்று … Read more

விவசாயிகளின் அவலத்தை என்னால் தாங்க முடியவில்லை! தற்கொலை செய்து கொண்ட சீக்கிய மதகுரு!

65 வயதான சீக்கிய மதகுரு பாபா ராம் சிங், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 21 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று 22 ஆவது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பல கட்சித் தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனை … Read more

விவசாயிகள் போராட்டம்.. பாஜக எம்.பி சன்னி தியோல் Y பிரிவு பாதுகாப்பு..!

பாலிவுட் நடிகரும் பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு ஒய்-பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சன்னி தியோல் பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் தொகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி எம்.பி ஆவார். 64 வயதான சன்னி தியோலுக்கு 11 பேர் பிளஸ் கொண்ட ஒய் பாதுகாப்பு வழங்கபப்ட்டுள்ளது. இதில் இரண்டு கமாண்டோக்கள் மற்றும் போலீஸ்காரர்கள் உள்ளனர். பாதுகாப்புப் படை குழு எப்போதும் சன்னி தியோலுடன் இருக்கும். அவரது உயிருக்கு … Read more

விவசாயிகள் போராட்டம்.. தினமும் ரூ. 3,500 கோடி நஷ்டம்..!

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 21 நாளை எட்டியுள்ளது. மேலும், நாடு முழுவதும் இருந்து அதிகமான விவசாயிகள் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள். இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பொருளாதார பாதிப்பு ஒவ்வொரு நாளும் 3,500 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்கின்றன என்று தொழில்துறை கூட்டமைப்பான அசோசெம் தெரிவித்துள்ளது. … Read more

நடு ரோட்டுல போராட்டக்களத்தில கரண்ட் தயாரித்த விவசாயி.!

நெடுஞ்சாலையில் மின்சாரத்தை உருவாக்கி, அதனை சாத்தியமாகியுள்ளார் டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி ஒருவர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில், விவசாயிகள் பல சவால்களை சந்திக்கின்றனர். அதிலொன்று மின்சாதனங்களை சார்ஜ் செய்வது. போராட்ட களத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் உறவினர்களை தொடர்புகொள்ள வைத்திருக்கும் முக்கிய சாதனம் செல்போன். அதற்கு அடிப்படை ஆதாரம் மின்சாரம் தேவை. நெடுஞ்சாலைகளில் போராடும் விவசாயிகளுக்கு மின்சாரம் வசதி கிடைப்பது கடினமான … Read more

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் – பிரதமருக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமி!

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் என்று பிரிட்டன் பிரதமருக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமி. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு எல்லைகளில் தொடர்ந்து 20 நாட்களாக கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகிறன்றனர். இதற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரராகள் என பலரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் கிட்டவில்லை. … Read more

#BREAKING: விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம்..!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும், ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் ஒரு நாள் நோன்பு வைத்துக் கொள்ள வேண்டும், விவசாயிகளின் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும்  எனவும் தெரிவித்தார். டெல்லியின் எல்லைப் பகுதியான சிங்குவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு செய்து கொடுத்த அடிப்படை வசதிகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 7-ஆம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு … Read more

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி.. உச்சநீதிமன்றத்தில் விவசாய அமைப்பு மனு தாக்கல்..!

சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒரு விவசாய அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.  கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்றம் நிறைவேற்றிய மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  இந்திய கிசான் யூனியன் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மூன்று புதிய சட்டங்கள் விவசாயத்தை வணிகமயமாக்குவதற்கு வழி வகுக்கும் என்று இந்திய கிசான் யூனியனின் தலைவர் வனுப்பிரதாப் … Read more

விவசாயிகள் போராட்டம் : பின்னணியில் பாகிஸ்தான், சீனா…! மத்திய அமைச்சர் அதிரடி!

தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் விவசாயிகளுடையது அல்ல. இதற்க்கு பின்னால் சீனாவும், பாகிஸ்தானும் இருக்கிறது மத்திய இணை அமைச்சர் ராவ்சாஹேப் டான்வே தெரிவித்துள்ளார்.  மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிற  நிலையில், இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர்,  இடதுசாரி முன்னணி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட … Read more