விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் – பிரதமருக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமி!

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் என்று பிரிட்டன் பிரதமருக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமி.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு எல்லைகளில் தொடர்ந்து 20 நாட்களாக கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகிறன்றனர். இதற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரராகள் என பலரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் கிட்டவில்லை. இதனால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த ஒரே பிரதமர் என்றால் அது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தான். விவசாயிகளின் போராட்டம் தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், விவசாயிகளின் உரிமைகளை போராடி நிலை நாட்டுவதற்கு கனடா எப்பொழுதுமே துணை நிற்கும் எனவும் தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு மத்திய அரசு சார்பில் வெளியுறவு துறை மூலமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  இதற்குப் பின்பும் மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ, “தான் அமைதியான போராட்டங்களின் உரிமைக்காக எப்பொழுதுமே எழுந்து நிற்பேன்” என கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போல ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனக்கோரி, லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது சிறுமி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நான் ஆஷ்லீன் கவுர் கில், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வீடியோக்களை அனுப்பினேன். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. எனவே நான் எழுதப்பட்ட கடிதத்தை வழங்கினேன் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்