பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்: தேர்வுத் துறை இயக்குநர்

பிப்ரவரி 1-ம் தேதி 12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பாளர்கள் நியமனம், மாணவர்களின் விவரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 12-ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வு துறை … Read more

பள்ளி மாணவர்களுக்கு மைக்ரோ ஜராக்ஸ் எடுத்து கொடுக்கும் தனியார் ஜராக்ஸ் கடைகள்….!!

வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, அரிசின் விதியை மீறி பள்ளி மாணவர்களுக்கு மைக்ரோ ஜராக்ஸ் எடுத்து கொடுக்கும் தனியார் ஜராக்ஸ் கடைகள்.. தேர்வு துறை உரிய நடவடிக்கை எடுக்கவும், ஜராக்ஸ் கடையின் உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனியில் பறக்கும் படையினரை முற்றுகையிட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள முத்து தேவன்பட்டியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பறக்கும் படையினரை மாணவர்கள், பெற்றோர் முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பறக்கும் படையினர் இடையூறு ஏற்படுத்தியதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கி பயன்படுத்த தடை- இந்து சமய அறநிலையத்துறை

புதுச்சேரி : கோவில் திருவிழாக்களில் அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கி வைக்கக்கூடாது. 10, +2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலி பெருக்கியை பயன்படுத்தக் கூடாது என அம்மாநில இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.