பள்ளி மாணவர்களுக்கு மைக்ரோ ஜராக்ஸ் எடுத்து கொடுக்கும் தனியார் ஜராக்ஸ் கடைகள்….!!

வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, அரிசின் விதியை மீறி பள்ளி மாணவர்களுக்கு மைக்ரோ ஜராக்ஸ் எடுத்து கொடுக்கும் தனியார் ஜராக்ஸ் கடைகள்.. தேர்வு துறை உரிய நடவடிக்கை எடுக்கவும், ஜராக்ஸ் கடையின் உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி முதல் தொடக்கம்…!!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சத்து 7 ஆயிரத்து 20 மாணவ மாணவிகள் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களில் 40 ஆயிரத்து 689 பேர் தனித் தேர்வர்கள். இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் மாநிலம் முழுவதும் 50,000 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.