முதல்வரின் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு?- சீமான் சந்தேகம்!

முதல்வர் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா, வரும் ஜனவரி 27 ஆம் தேதி பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகவுள்ள நிலையில், அவருக்கு உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சசிகலாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தீவிர தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் … Read more

“பாஜகவிடம் கைகட்டி நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி”- மு.க.ஸ்டாலின்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.விடம் கைகட்டி நிற்பதாக “தமிழகம் மீட்போம்” என்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், “தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை  நடத்திவருகிறார். அந்தவகையில், தஞ்சாவூரில் இன்று நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அப்பொழுது பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி  காவேரி பிரச்சனைக்கு தீர்வு காணாமல் பாஜகவிடம் கைகட்டி நிற்பதாகவும், … Read more

பயிர் சேதத்தை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்- முதல்வர்!

நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான நிவர் புயல், கடந்த 28 ஆம் தேதி முழுமையாக கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கம் காரணமாக சென்னை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் சாலைகைள் உட்பட பல இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் ஏரி, குளங்கள் என அனைத்தும் நிரம்பியது. இந்தநிலையில், இந்த புயல் தாக்கம் காரணமாக பல இடங்களில் நெல், உள்ளிட்ட … Read more

#Breaking: ஆளுனருடன் முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு திடீர் ரத்து!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்திக்கவிருந்த நிலையில், திடீரென அந்த சந்திப்பு ரத்தானது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநர் காத்து வருவதால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசவிருந்தார். … Read more

இன்று மாலை ஆளுநரை சந்திக்கும் முதல்வர்.. 7 பேர் விடுதலை குறித்து பேச வாய்ப்பு?

சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேசுகிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. இதன் காரணமாக 7 விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு தமிழக அரசு கோப்புகளை சமர்ப்பித்த நிலையில், ஆளுநர் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை … Read more

சேலத்தில் ரூ.118.93 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி!

சேலம் மாவட்டத்திற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, ரூ.118.93 கோடி மதிப்பீட்டில் 44 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, வனவாசி பகுதியில் ரூ.123.53 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், ரூ.118.93 கோடி மதிப்பீட்டில் 44 திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாடி வைத்தார். இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதனைதொடர்ந்து நடைபெற்ற … Read more

“பீகாரை தொடர்ந்து தமிழகத்திலும் பாஜக வெற்றிபெறும்” – எல்.முருகன்!

பீகார் தேர்தலை தொடர்ந்து, தமிழகத்தில் பாஜக வெற்றிபெறும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பழனிசாமியை சந்தித்ததாகவும், இந்த சந்திப்பில் அரசியல் பற்றி பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் … Read more

பள்ளிகள் திறப்பு: 12ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் – அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து வரும் 12ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவிய கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கடந்த 7 மாதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அண்மையில், வருகின்ற 16-ம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் திறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளும், அனைத்து இளநிலை படிப்பு துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்காக, … Read more

முதல்வர் – ஆளுநர் சந்திப்பு நிறைவு.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்துள்ளதாகவும், இதில் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆளுநர்- முதல்வர் சந்திப்பு குறித்து சென்னை, கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் … Read more

கோயம்பேடு சந்தையில் சிறு வியாபாரிகளை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்- முதல்வர் பழனிசாமி!

கோயம்பேடு சந்தையில் பழம், சிறு வியாபாரிகளை அனுமதிப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பேசிய முதல்வர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதாகவும், பண்டிகை காலத்தில் கொரோனா … Read more