குறைகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய சிறப்புக்குழு ஒன்றை அமைத்திட வேண்டும்-முதலமைச்சர் பழனிசாமிக்கு தினகரன் கோரிக்கை

முதலமைச்சர் பழனிசாமிக்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அதில், தமிழ்மொழியின் தொன்மை குறித்த தவறான தகவலை போல பாடப்புத்தகங்களில் இருக்கும். குறைகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய சிறப்புக்குழு ஒன்றை அமைத்திட வேண்டும். அரசு தயாரித்திருக்கின்ற பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்து குறைகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்திட வேண்டும். மேலும் இப்படி பட்டவர்த்தனமாக வரலாற்றைத் திரித்து பாடங்களைத் தயாரித்தவர்கள், இனிமேல் அரசு சார்ந்த எந்த குழுக்களிலும் இடம்பெறுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவிதித்துள்ளார்.

அதிகாரங்களை ஒற்றைப்புள்ளியில் குவிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகிவிடும்-தினகரன்

ஆர்.டி.ஐ  சட்டத் திருத்த மசோதா தொடர்பாக  அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,  ஆர்.டி.ஐ. சட்டத்திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப்போகச் செய்யும்.அரசுக்கும் சாமானியர்களுக்கு பாலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருந்தது. ஆனால்  தன்னாட்சி அமைப்பை மத்திய அரசு தனது அதிகாரத்துக்குள் கொண்டுவர முயற்சிப்பது சரியல்ல. அதிகாரங்களை ஒற்றைப்புள்ளியில் குவிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகிவிடும். ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற விடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்க வேண்டும் என்று  தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுகவில் இருந்து சென்றவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை-தினகரன்

கடந்த சில நாட்களாக தினகரனின் அமமுக கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகளான செந்தில் பாலாஜி ,தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் மாற்று கட்சியில் இணைந்தனர்.மேலும் அமமுகவில் இருந்து விலகி  இசக்கி சுப்பையாவும் அதிமுகவில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில்  அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அமமுகவில் இருந்து சென்றவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை.அவர்கள் நிர்வாகிகள்தான் அதிமுகவுக்கு போக முடிவு எடுத்த பிறகுதான் அமமுகவில் இருந்து விலகியுள்ளார் இசக்கி சுப்பையா என்று தெரிவித்தார்.

தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை-தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.இதனால் அமமுகவில் இருந்து திமுகவில்  இணைந்தார் தங்க தமிழ்செல்வன். இதனிடையே இன்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது  அவர் கூறுகையில்,  தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை . அடுத்த தேர்தலுக்குள் பலன்களை அனுபவிப்பதற்காகவே வெளியேறி சென்றுள்ளனர்.புதிய மாவட்ட செயலாளரை தேர்வு செய்வதற்காக கட்சியினருடன் ஆலோசனை நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

காலியாகும் தினகரன் கூடாரம் ! அதிமுகவில் இணைந்த அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன்

நெல்லை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக . இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு   டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.சமீபத்தில் தினகரன் … Read more

தேர்தலில் தோற்று போனதால் அமமுக அழிந்துவிடாது-தினகரன்

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. இதனிடையே அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுங்கயில், தேர்தலில் தோற்று போனதால் அமமுக அழிந்துவிடாது. திமுகவும் அதிமுகவும் கூட தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன .தமிழக மக்கள் எந்த வகையிலும் இந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள். மத்திய அரசு முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க.வில் இருந்து விலக விரும்புவர்கள் தாராளமாக விலகிக்கொள்ளலாம்-தினகரன்

பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக . இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு   டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.சமீபத்தில் தினகரன் கட்சியில் இருந்து செந்தில்பாலாஜி திமுகவிற்கு சென்றார்.இது தினகரன் கட்சிக்கு பின்னடைவாக இருந்தாலும் அதை சமாளித்து மக்களவை தேர்தல் … Read more

300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு “0” மட்டும் தானா! எங்கே சென்றது வாக்குகள் ?

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. இன்று தேர்தல் முடிவுக்கு பின்னர் அமமுகவின் பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,தேர்தலில் வெற்றியை எதிர்பார்த்தோம்.ஆனால் மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். 300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு பூஜ்ஜிய வாக்குகளே பதிவாகி உள்ளன. இதற்கு தேர்தல் ஆணையம் தான் பதில் கூற வேண்டும். எங்கள் முகவர்கள் போட்ட … Read more

ஜூன் 1ம் தேதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அமமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.மேலும் மாவட்ட செயலாளர்கள்,மக்களவை,இடைத்தேர்தல்  தொகுதி வேட்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் – ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு !உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல்

ஓபிஎஸ் – ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலைச் சின்னத்திற்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தரப்பும் சசிகலா தரப்பும் போட்டிபோட்டது. இதைத்தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரி சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச்சின்னத்தை ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியது. … Read more