108 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.! தாலி எடுத்துக் கொடுத்த துணை முதல்வர்.!

சென்னையில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் 108 ஏழை, எளியவர்களுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து, … Read more

ஐயப்பனை தரிசனம் செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்..!

நேற்றுமுன்தினம் பிற்பகல் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு துணை முதலமைச்சர் புறப்பட்டார்.  18-ம் படி வழியாக இருமுடி சுமந்தபடி ஐயப்பனின் தரிசனம் செய்த  ஓ. பன்னீர் செல்வத்திற்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி மகரவிளக்கு தெரிந்தது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 48 நாள்கள் விரதத்துக்கு பின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று சபரிமலையில் உள்ள ஐயப்பனை … Read more

மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்.! துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றார்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது  துணை முதலமைச்சராக அஜித் பவார் துணை மீண்டும் பதவி ஏற்றார். மகாராஷ்டிரா மாநிலத்தில்  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு பின் கூட்டணியை அமைத்து கடந்த மாதம் 28-ம் தேதி ஆட்சி அமைத்தது. அப்போது  உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றார் அவருடன் 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர். இதைத்தொடர்ந்து  கடந்த 24-ம் தேதி … Read more

மீண்டும் மஹாராஷ்டிராவில் துணை முதலமைச்சராக அஜித் பவார்.?

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் , முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை நேற்று திடீரென சந்தித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து கடந்த மாதம் 28-ம் தேதி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். 3 கட்சிகளின் இருந்து தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். நேற்று … Read more

தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்: துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவிப்பு!

இன்று நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதில் துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். அது குறித்த ஒரு தகவல் :- வருவாய்த் துறை ரூ. 6,144 கோடி குடிமராமத்து பணிகளுக்கு ரூ. 300 கோடி நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 11,073.66 கோடி பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.27,205.88 கோடி பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி உயர்கல்வித் துறைக்கு ரூ.4620.20 கோடி ரயில்வே பணிகள் … Read more

தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்!

  தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சார்பில் கீழ்கண்ட துறைகளுக்கான நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ₹750 கோடி ஒதுக்கீடு மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சானிட்டரி … Read more

சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் உரையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்து முடிந்ததும் இன்றைய சட்டசபை அலுவல் நிறைவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், சட்டசபை … Read more