மீண்டும் மஹாராஷ்டிராவில் துணை முதலமைச்சராக அஜித் பவார்.?

மீண்டும் மஹாராஷ்டிராவில் துணை முதலமைச்சராக அஜித் பவார்.?

  • தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் , முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை நேற்று திடீரென சந்தித்தார்.
  • தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து கடந்த மாதம் 28-ம் தேதி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். 3 கட்சிகளின் இருந்து தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

நேற்று மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி  நிலையில் நடைபெறவில்லை.  இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் , முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை நேற்று திடீரென சந்தித்தார்.இருவரும் 1 மணி நேரத்திற்கும் மேல்  ஆலோசனை நடத்தினர்.

இவர்கள் மந்திரி சபை விரிவாக்கம் குறித்து பேசியதாகவும் வருகின்ற  30-ம் தேதி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படலாம் என தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர் .மேலும் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் பாஜக தலைமையில் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , அஜித் முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube