விவசாயிகளை நேரில் சந்திக்க சென்ற தமிழக எம்பிக்கள் தடுத்து நிறுத்தம்.!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்பிக்களை தடுத்து நிறுத்திய காவல்துறை. புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை சந்திக்க காசிப்பூர் சென்ற தமிழக எம்பிக்களை தடுத்து நிறுத்தியுள்ளது காவல்துறை. டெல்லி – உத்தரபிரதேச எல்லையான காசிப்பூரில் தடுப்பு வேலிகள் போடப்பட்டுள்ளதால் எம்பிக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனிமொழி, திருச்சி சிவா, தொல் திருமாவளவன், ரவிக்குமார், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் விவசாயிகளை சந்திக்க பேருந்தில் சென்று … Read more

மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மலர்த்தூவி மரியாதை.!

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர்கள் மலர்த்தூவி மரியாதை. தேச தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு..!

டெல்லியில் இஸ்ரேல் நாட்டு தூதரகத்தின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் காயம் எனவும்  நான்கு கார்கள் சேதம் அடைந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் நாட்டு தூதரகத்தின் அருகே வெடித்த வெடிகுண்டு குறைந்த சக்தி கொண்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியா அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட நாடாக உள்ளது – பிரதமர் மோடி

இந்தியா எல்லா முனைகளிலும் திறமை மிக்க நாடாக உள்ளது என்று பிரதமர் மோடி தேசிய கேடட் கார்ப்ஸ் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் உள்ள காரியப்பா மைதானத்தில் நடைபெற்ற வருடாந்திர பிரதமரின் தேசிய கேடட் கார்ப்ஸ் (National Cadet Corps (NCC) கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, கொரோனா வைரஸ் மற்றும் எல்லைகளில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முடியும் என்பதை கடந்த ஆண்டு இந்தியா காட்டியுள்ளது. கொரோனாக்கு எதிரான “மேட் இன் இந்தியா” … Read more

வேளாண் சட்டம்: உங்கள் கருத்துக்களை இந்த இணையத்தில் தெரிவிக்கலாம்.!

மூன்று வேளாண் சட்டங்களை குறித்து விமர்சனம், கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு அழைப்பு விடுத்துள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு மற்றும் விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்படும் பரிந்துரைகளை அறிக்கைகளாக சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் நிபுணர்கள் குழுவை nநியமித்து உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 3 புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய சங்கங்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் விவசாய தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பவர்களிடம் இருந்து கருத்துக்கள், விமர்சனங்கள் கேட்கப்படுகிறது. இதன்மூலம் இந்திய … Read more

அடுத்த 2 ஆண்டுகளில் இந்த 6 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

அடுத்த 2 ஆண்டுகளில் 6 மாநிலங்களின் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி முதல்வரும், ஆத்மி கட்சியின் (AAP) தேசிய அழைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், இன்று டெல்லியில் கபாஷேராவில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசியபோது, ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சி குறித்து நாடு முழுவதும் மக்கள் பேசி வருகிறார்கள். நாட்டின் அனைத்து இடங்களிலும், மக்கள் மின்சாரம் மற்றும் நீர் மானியங்களையும், டெல்லியில் இருக்கும் நலத்திட்டங்களை விரும்புகிறார்கள். நாம் … Read more

தேசிய கொடி அவமதிப்பு: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை மேற்கொண்டனர். இந்த பேரணி அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால், காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடி … Read more

டெல்லி வன்முறை: போராட்டம் நடத்தும் ஒரு அமைப்பு வாபஸ் பெற்றது.!

டெல்லியில் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் போராட்டம் வாபஸ் பெறுவதாக வி.எம்.சிங் தெரிவித்துள்ளார். வன்முறை போராட்டங்கள் தங்களுக்கு ஏற்புடைத்தல்ல என ஒருங்கிணைப்புக் குழுவின் சர்தார் வி.எம்.சிங் செய்தியர்களிடம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் போராடி வரும் நிலையில், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் போராட்டம் வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். விஎம் சிங் கடந்த மாதம் AIKSCC-இன் தேசிய கன்வீனர், பண்ணை … Read more

டெல்லி டிராக்டர் பேரணியில் வன்முறை – உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்!

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல். குடியரசு தினத்தையொட்டி நேற்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இந்த டிராக்டர் பேரணி அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கி, டெல்லியில் நுழைந்ததால், விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசியது. இதனால் விவசாயிகளுக்கு, போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து வன்முறையாக வெடித்தது. இதையடுத்து, டெல்லி செங்கோட்டையை முற்றிகையிட்ட விவசாயிகள், அங்குள்ள கொடி கம்பத்தில் ஏறி … Read more

மீண்டும் எல்லைகளுக்கு திரும்புங்கள் – பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள்

உண்மையாக போராடும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்ப வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். அனுமதித்த நேரத்திற்கு முன்பே பேரணி தொடங்கி டெல்லியில் நுழைந்ததால், காவல்துறை கண்ணீர் வெடிகுண்டு வீசியுள்ளது. போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. வன்முரை தீவிரமடைந்ததை அடுத்து டெல்லி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, இன்று நள்ளிரவு முதல் … Read more