அடுத்த 2 ஆண்டுகளில் இந்த 6 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

அடுத்த 2 ஆண்டுகளில் 6 மாநிலங்களின் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி முதல்வரும், ஆத்மி கட்சியின் (AAP) தேசிய அழைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், இன்று டெல்லியில் கபாஷேராவில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசியபோது, ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சி குறித்து நாடு முழுவதும் மக்கள் பேசி வருகிறார்கள். நாட்டின் அனைத்து இடங்களிலும், மக்கள் மின்சாரம் மற்றும் நீர் மானியங்களையும், டெல்லியில் இருக்கும் நலத்திட்டங்களை விரும்புகிறார்கள். நாம் அதற்கான இடைவெளிகளைக் குறைக்க வேண்டும். ஆதலால் நாம் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும்.

அடுத்த 2 ஆண்டுகளில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களின் தேர்தலில் எங்கள் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மக்கள் தயாராக இருக்கிறார்கள், இப்போது நாங்கள் அவர்களை அணுக வேண்டும். டெல்லியில், கொரோனா பிரச்சினையை அரசியலாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஆம் ஆத்மி அரசாங்கம் ஆரம்பத்திலேயே முடிவு செய்திருந்தது. கொரோனாவால் கடினமான சவாலை நாங்கள் கண்டிருக்கிறோம்.

கடந்த நவம்பர் 11 அன்று, டெல்லி ஒரு நாளில் 8,500 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. உலகில் எந்த நகரமும் அத்தகைய சூழ்நிலைக்கு உட்பட்டதில்லை. எங்கள் கொரோனா பணிகள் இப்போது உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு எங்களிடம் ஒரு பிளாஸ்மா வங்கி தயாராக இருந்தது என்று கூறியுள்ளார். பல மாநிலங்கள் தவறான சோதனைகள் மற்றும் தவறான எண்ணிக்கையை தெரிவித்தனர்.

டெல்லியில், நாங்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு நாளும் துல்லியமான எண்ணிக்கையை மக்களுக்கு தெரிவித்தோம் என்று நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 2020 தலைநகர் டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக அக்கட்சி சார்பாக தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக சுமார் 400 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்