இந்தியா அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட நாடாக உள்ளது – பிரதமர் மோடி

இந்தியா எல்லா முனைகளிலும் திறமை மிக்க நாடாக உள்ளது என்று பிரதமர் மோடி தேசிய கேடட் கார்ப்ஸ் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் உள்ள காரியப்பா மைதானத்தில் நடைபெற்ற வருடாந்திர பிரதமரின் தேசிய கேடட் கார்ப்ஸ் (National Cadet Corps (NCC) கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, கொரோனா வைரஸ் மற்றும் எல்லைகளில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முடியும் என்பதை கடந்த ஆண்டு இந்தியா காட்டியுள்ளது.

கொரோனாக்கு எதிரான “மேட் இன் இந்தியா” தடுப்பூசிகளை தயாரிப்பதை குறிப்பிடுகையில், இந்தியா அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட நாடாக உள்ளது. தடுப்பூசி பாதுகாப்பை கொண்டிருந்தாலும், இந்தியாவிற்கு சவால் விடுபவர்களின் நவீன ஏவுகணை அழித்தாலும், நாடு எல்லா முனைகளிலும் திறமை மிக்க உள்ளது. இந்தியா, சீனாவுடன் எல்லை மோதலில் ஈடுபட்டுள்ளது.

தடுப்பூசியில் இந்தியா ‘aatmanirbhar’ என்றால், அது தனது ஆயுதப் படைகளை நவீன மயமாக்குவதற்கும் சம வீரியத்துடன் முயற்சி செய்து வருகிறது. நமது நாட்டில் உள்ள ஆயுதப் படைகளின் ஒவ்வொரு பிரிவும் சிறந்தது என்பதை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது நாட்டில் சிறந்த போர் இயந்திரங்கள் உள்ளன.

ரஃபேல் விமானங்கள் இந்தியா வரும்போது நடுவழியில் எரிபொருள் நிரப்பப்பட்டதை குறிப்பிடுகையில், சவுதி, கிரேக்க நாடுகள் உதவின. இது வளைகுடா நாடுகளுடனான நமது வளர்ந்து வரும் உறவை காட்டுகிறது. உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் செய்து வருகிறோம். விரைவில் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளராக விரைவில் அறியப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்