வருகின்ற ஜன.17 ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்!

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வருகின்ற ஜன.17 ஆம் தேதி தமிழக எம்.பி.க்கள் சந்திக்கவுள்ளனர். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு,ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது.ஆனால்,இந்த மசோதாவை குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பாததால்,நீட் விலக்கு மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,எம்பி டிஆர் பாலு உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் குழு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மூன்று முறை சந்திக்க முயன்றும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து,சட்டமன்றத்தில் … Read more

விவசாயிகளை நேரில் சந்திக்க சென்ற தமிழக எம்பிக்கள் தடுத்து நிறுத்தம்.!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்பிக்களை தடுத்து நிறுத்திய காவல்துறை. புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை சந்திக்க காசிப்பூர் சென்ற தமிழக எம்பிக்களை தடுத்து நிறுத்தியுள்ளது காவல்துறை. டெல்லி – உத்தரபிரதேச எல்லையான காசிப்பூரில் தடுப்பு வேலிகள் போடப்பட்டுள்ளதால் எம்பிக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனிமொழி, திருச்சி சிவா, தொல் திருமாவளவன், ரவிக்குமார், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் விவசாயிகளை சந்திக்க பேருந்தில் சென்று … Read more

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான 6 எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான 6 எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 மாநிலங்களவை  பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில்  திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,  முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.இந்நிலையில் … Read more