6 மணி நேரத்தில் 10.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி …!

தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் மூலம் கடந்த 6 மணி நேரத்தில் 10.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் தற்பொழுது கொரோனா வைரஸை ஒழிக்கும் பணி மிகத் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கொரோனாவை ஒழிக்கும் விதமாக பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழகத்தில் நான்கு கட்டமாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்று ஐந்தாம் கட்ட தடுப்பூசி … Read more

மெரினாவிலுள்ள நெறிக்குறவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்!

மெரினாவிலுள்ள நெறிக்குறவர்களுக்கு இன்று காலை முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில், கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர்  வெளியிட்டுள்ள பதிவில், மெரினாவில் நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்கள் … Read more

மெகா தடுப்பூசி முகாம் : 7 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

தமிழகத்தில் இன்று நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், 7 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 12, 19 மற்றும் 26 ஆகிய மூன்று தினங்கள் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட நிலையில், இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றும் தமிழகத்தில் நான்காம் கட்டமாக தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதியில் நடக்கக்கூடிய … Read more

இன்று தமிழகத்தில் 4 – ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் …!

இன்று தமிழகத்தில் 4 – ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில், 1.50 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை மூன்று கட்டமாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 12, 19, 26 ஆகிய மூன்று தினங்களும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் … Read more

கிராமப்புற பகுதியில் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப்படும் – அமைச்சர் ராஜகண்ணப்பன்!

கிராமப்புற பகுதியில் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்தில் திமுக சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் தேர்தல் பரப்புரையை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கியுள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியின் பொழுது சுமார் 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் முதல்வர் … Read more

அக்டோபர் 1 முதல் குற்றாலம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி திறப்பு – சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்!

குற்றாலம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகள் அக்டோபர் 1 முதல் திறக்கப்பட உள்ளதால், மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுலாத்தலங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு … Read more

இன்று தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்…!

இன்று தமிழகத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.  இன்று தமிழகம் முழுவதும் மூன்றாவது முறையாக மெகா தடுப்பூசி முகம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான அளவு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த செப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது மாபெரும் கொரோனா … Read more

பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து 400 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது – மாநில சுகாதார செயலாளர்!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து 400 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் இருந்து. இந்நிலையில் மாணவர்களுக்கு சில மாதங்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்லாவிட்டால் மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் கூறியதை அடுத்து, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் … Read more

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரத்து – சி.பி.எஸ்.இ!

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு தேர்வு கட்டணம் கிடையாது என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவிகளுக்கான நடப்பாண்டு பதிவு கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் கிடையாது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இது வளர்ப்புப் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இழந்த மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021-2022 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் … Read more

1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? இன்று ஆலோசனை கூட்டம்!

1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து பாடம் நடத்தாவிட்டால் உளவியல் ரீதியாக மாணவர்கள் … Read more