1000 ரூபாய் விநியோகம்! டோக்கன் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் – அமைச்சர் காமராஜ்

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நிவாரண தொகைக்கான டோக்கன் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இடையில் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் … Read more

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 190 பேருக்கு கொரோனா.!

சற்று நேரத்திற்கு முன் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக  உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 77,330 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் இதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது  என பீலா ராஜேஷ் கூறினார். நேற்று தமிழகத்தில் 57 பேருக்கு … Read more

#Breaking: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக இருந்த நிலையில், தற்போது மேலும் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பேசிய அவர், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 190 பேருக்கு இதுவரை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 190 பேரும் 19 மாவட்டங்களை … Read more

இந்தியாவுக்கு வந்தது ஜாக் மா மற்றும் அலிபாபா ஃபவுண்டேஷன்ஸ் நன்கொடை அளித்த மருத்துவ உபகரணங்கள்

கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது. எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேண்டுகோளை ஏற்று பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக இந்தியாவிற்கு சீனாவை சேர்ந்த பல … Read more

மததுவேஷங்களுக்கு இடமளிக்க வேண்டாம் – சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார்

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 8 முதல் 20 ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இதனால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளது.  அந்த வகையில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் … Read more

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 386 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சுமார் 190 நாடுகளில் பரவியுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றனர். இந்த கொரோனா தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 386 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது … Read more

வீட்டிற்கு வெளியே வந்து மரணத்தை சந்திக்க வேண்டாம்.! தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நம் நாட்டிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துகொன்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமூக விலகலின் அவசியம் குறித்து பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் அந்த வகையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் கருத்து கூறியுள்ளார்.  தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்து மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டாம் . கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்துத் … Read more

கொரோனா தடுப்பு -கரூர் வைஸ்யா வங்கி ரூ.5 கோடி நிதியுதவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கரூர் வைஸ்யா வங்கி ரூ.5 கோடி நிதியுதவி வழங்குகிறது.  கொரோனா வைரஸ்  இந்தியாவில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது. எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேண்டுகோளை ஏற்று பலரும் … Read more

டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய 88 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 08 முதல் 20ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் பேரில் 515 பேர் மட்டுமே … Read more

BREAKING:சிகிச்சை அளிக்கும் போது உயிரிழக்க நேரிட்டால் ரூ.1 கோடி – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு .!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1637-ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் போது  மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் … Read more