தனிமைப்படுத்தும் மையமாக மாறும் அரசு பள்ளிகள்- தமிழக அரசு முடிவு

தற்காலிக கொரோனோ தனிமைப்படுத்தல் மையங்களாக அரசு பள்ளிகளை மாற்ற தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் கொரோனோ நோய் தொற்று நாளூக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இது வரையில் 200 மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மேலும் பரவலை தடுக்கவும்,கட்டுக்குள் கொண்டுவரவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனோ நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்புள்ள நபர்களை தனிமைப்படுத்துவது தொடர்பாக அரசு முடிவு எடுத்துள்ளது. அவ்வாறு தனிமைபடுத்தப்பட்டவர்களை எல்லாம் கண்காணிப்பதற்கு உகந்த வகையில் தமிழகத்தில்  உள்ள … Read more

கொரோனா தலைதூக்கும் மாநில முதல்வர்களோடு இன்று ஆலோசனை

இந்தியாவில் வைரஸ் அதிகம் பரவிய மாநில முதல்வர்களின் தடுப்பு நடவடிக்கை மற்றும் தீவிரமாக கட்டுப்படுத்துவது குறித்து இன்று  பிரதமர் மோடி கான்பரன்சிங் மூலாமக ஆலோசனை  நடத்துகிறார். உலகளவில் 9 லட்சத்தை கடந்து மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கும் கொரோனா  வைரஸ் தொற்றால் இதுவரை 47 ஆயிரம் பேரை காவு வாங்கி வருகிறது.இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரிக்க துவங்கி உள்ள நிலையில் 1834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 457 பேருக்கு … Read more

மதுரையில் 4 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை!

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், மதுரையில், 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நரிமேடு, தபால் தந்தி  நகர் பகுதிகளில் 4 நாட்கள் பொதுமக்கள் வெளியே வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சிந்தாதிரிப்பேட்டை சந்தை 5 நாட்கள் மட்டுமே இயங்கும்-தகவல்

 கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.தமிழ்நாட்டில் ஊடரங்கு அமலில் இருந்து வருகிறது.இதனால் மக்களின் அத்தியாவசிய தேவை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையானது வாரத்தில் 5 நாட்கள் மட்மே இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக வெள்ளி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மீன் சந்தையை மூட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1000 ரூபாய் விநியோகம்! இன்று முதல் வழங்கப்படுகிறது

இன்று முதல் ரேஷன் கடைகளில்  கொரோனா நிவாரண உதவித்தொகை ₹1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது.  கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இடையில் இன்று … Read more

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா.!

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற திருவண்டார்கோயில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.  

டிக் டாக் அதிரடி அறிவிப்பு: ரூ.100 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்க முடிவு.!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா வைரசால் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் நிதி அளிக்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஏராளமான கிரிக்கெட் வீரகள், திரைப்பட பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் என பலர் அவர்களால் முடிந்த நன்கொடையை வழங்கி வருகின்றனர். அதன்படி டாடா நிறுவனம் ரூ.1,500 கோடி, எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1,031 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளனர். In … Read more

ஊரடங்கு உத்தரவால் சிரமப்படும் மக்கள் ! ரூ.1.25 கோடி நிதி திரட்டிய சானியா மிர்சா

ஊரடங்கு உத்தரவால் சிரமப்படும் மக்களுக்கு ரூ.1.25 கோடி நிதி திரட்டியுள்ளார்  சானியா மிர்சா. கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது. எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேண்டுகோளை ஏற்று பலரும் … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 234 ஆக உயர்வு.!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். ஏற்கனவே 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து 234-ஐ எட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் அதிக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் தமிழகம் 3ம் இடத்தில உள்ளது.  இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட 110 பேரும் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற … Read more

சி.பி.எஸ்.இ 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல்-பாஸ்.!

கொரோனா அச்சுறுத்தலை காரணமாக சி.பி.எஸ்.இ கல்வித்திட்ட மாணவர்களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் 9 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் பருவமுறை, பயிற்சி தேர்வு போன்றவை அடிப்படையில் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் … Read more