கொரோனா வைரஸ் காரணமாக ஏ.ஆர்.ரகுமானின் நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

சமீப காலமாக  கொரோனா என்ற கொடுமையான நோய் உலகையே  அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் தொடங்கி பல்லாயிரக்கணக்கான  உயிர்களை காவு வாங்கியது.  இந்த நோய் தற்போது கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது.  இந்த நோய் சீனாவை தொடர்ந்து, பல நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, பல திரையரங்குகளுக்கு மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் பீதியால் மார்ச் 18ல் வங்கதேசத்தில் நடக்கவிருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஓடி விளையாடு பாப்பா! இங்கு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இல்லையடி பாப்பா! : டி.இமான்

இசையமைப்பாளர் டி.இமான் பிரபலமான இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவர் பல தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து  வருகின்றனர். இதனையடுத்து, பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான இமான் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதில், ‘ஓடி விளையாடு பாப்பா! இங்கு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இல்லையடி … Read more

இசையமைப்பாளராக மாறிய பிரபல பாடகி!

பாடகி ஸ்வாகதா பிரபலமான பாடகி ஆவார். இவர் காற்றின் மொழி படத்தில், ‘டர்ட்டி பொண்டாட்டி, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’ போன்ற பாடல்களை பாடி பிரபலமானவர். இந்நிலையில், இவர் தற்போது, தானே ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்த பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவை அவரே தலைமை நாயகியாக நடித்தும் உள்ளார். இந்த வீடியோவை யூடியூபில், அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இசை, குரல், நடிப்பு என அனைத்து பொறுப்பையும் அவரே ஏற்று … Read more

ஏ.ஆர்.ரகுமானின் இளம் வயது புகைப்படம்! எப்படி இருக்காருனு பாருங்க! வைரலாகும் புகைப்படம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது பல விருதுகளை பெற்று புகழின் உச்சியில் இருக்கும் இவர், தமிழ் படங்களுக்கு மட்டுமல்லாது, ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது இளமை வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View this post … Read more

25 படங்களை நிறைவு செய்த பிரபல இசையமைப்பாளர்!

பிரபல இசையமைப்பாளரான ஜிப்ரான் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர், வாகை சூடவா படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது இவரது இசையில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படமானது இவரது 25-வது படமாகும். மேலும், இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.  

இவர் இசையமைப்பாளர் மட்டும் இல்லை! பாடகரும் கூட! ஜிப்ரான் இசையில் பாடகராக களமிறங்கிய இளம் இசையமைப்பளார்!

இளம் இசையமைப்பாளரான அனிரூத் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராவார். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பாளராக இருந்தாலும், பாடல் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், தற்போது இவர், ஜிப்ரான் இசையமைத்து வரும் ‘சிக்ஸர்’ படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ” எனது இசையில் அனிரூத் முதல்முறையாக பாடியுள்ளார். “பாபா பிளாக் ஷிப்” என தொடங்கும் பாடலை பாடியுள்ளார் என பதிவிட்டுள்ளார்.