அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்க உத்தரவு..!

அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அரசு கல்லூரிகளில் விசுவல் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி போன்ற பாடப்பிரிவுகளை புதிதாக தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர் அவர்களின் தலைமையில் தடைபெற்ற கூட்டத்தில் அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் துவங்குவது தொடர்பாக கருத்துருக்கள் அனுப்பும் போது நவீன காலத்திற்கு தொடர்புடைய BCA MCA BSe … Read more

மதுபோதையில் கல்லூரிக்குள் நுழைந்து இளைஞர்கள் ரகளை..! 6 பேர் கைது…!

மதுரையில் கல்லூரியில் போதையில் தகராறு செய்த இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர்.  நேற்று முன்தினம் மதுரை மீனாட்சி அரசு கலைக்கல்லூரி சாலையில் இளைஞர்கள் சிலர் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒலி எழுப்பியவாறு அதிவேகத்தில் சென்றுள்ளனர்.  மேலும், ஆபாச வார்த்தைகளால் கூச்சலிட்டபடி சென்றுள்ளனர். இளைஞர்களின் செயல் அங்கிருந்த மாணவிகளை அச்சத்தில் ஆழ்த்திய நிலையில்,  இதனை பார்த்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரின் தந்தை கல்லூரி அருகே ஏன் இப்படி செய்கிறீர்கள் மாணவிகள் பயப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த … Read more

மாணவர்களே மறந்துறாதீங்க..! இன்றைக்கு தான் கடைசி நாள்..!

மருத்துவ மாணவர்களில், கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த  கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தல்.  மருத்துவ மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதில் 5,647 எம்.பி.பி.எஸ் மற்றும் 1389 பி.டி.எஸ் இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.  இந்நிலையில் கல்லூரிகளில் சேருவதற்கு  இன்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த  கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், … Read more

அட இப்படி ஒரு காதலா..? காதலியை சூட்கேசில் வைத்து அழைத்து செல்ல முயன்ற காதலன்…!

கர்நாடக மாநிலம், உடுப்பியில் இஞ்சினீரிங்  விடுதியில், மாணவன் ஒருவன் தனது காதலியை சூட்கேசில்  வைத்து அழைத்து செல்ல முயற்சி. கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் மணிபால் பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கிப் பயின்ற மாணவர் ஒருவர் பெரிய சூட்கேசுடன் விடுதிக்குள் நுழைய முயன்றார். அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த காவலர் சூட்கேசுடன் மாணவர் வருவதைப் பார்த்ததும் சந்தேகமடைந்து அதற்குள் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவன் தான் … Read more

#Breaking : காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு …!

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை காரணமாக  சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிரமம் உள்ளதால் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே, தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் காஞ்சிபுரத்தில் … Read more

கனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் கனமழை எதிரொலியால், இன்று பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கனமழை எதிரொலியால், இன்று பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, வேலூர், திண்டுக்கல், தேனி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, தருமபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், … Read more

37 அரசு கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம் – உயர்கல்வித்துறை

தமிழகத்தில் 37 அரசு கல்லூரிகளில் புதிய முதல்வர்களை நியமித்து, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 37 அரசு கலை அறிவியல், கல்வியியல், ஒட்டி தேர்வு பயிற்சி கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கல்லூரிகளிகளில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர்கள் முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வர்கள் உடனடியாக பணிக்கு சேருமாறு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். பெரம்பலூர், ஓசூர், கொடைக்கானல், நாகர்கோவில், தேனி கலை & அறிவியல் கல்லூரிகளுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர், அவிநாசி, சங்கரன்கோவில், தரங்கம்பட்டி, வானூர் … Read more

கனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

கனமழை எதிரொலியால், 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குளாகி உள்ளது. இந்நிலையில், கனமழை எதிரொலியால், 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், திருவண்ணமலை, தஞ்சை, மயிலாடுதுறை, சேலம், கரூர், திருப்பத்தூர், … Read more

முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் .தொடக்கம்..!

முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து, தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு முதல் பயிலும்  மாணவர்களுக்கும், முதுகலை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் … Read more

ஆன்லைன் வகுப்பு தொடங்கவுள்ள நிலையில் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உத்தரவு…!

ஆன்லைன் வகுப்பு தொடங்கவுள்ள நிலையில் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உத்தரவு. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக  அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து  மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்க உள்ள நிலையில் பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைத்து வேலைநாட்களிலும் கட்டாயம் … Read more