செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இந்த பகுதிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

Michaung Cyclone - Thiruvannamalai School leave

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.  தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது.  லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்..! சென்னையில் மீட்புப்பணிகள் … Read more

நாளை பொதுவிடுமுறை..! தனியார் நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள்..!

Tngovt

மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை நீடிக்கும் நிலையில்,  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களும் நாளை விடுமுறை அறிவிக்க வேண்டும், என்றும் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்- ஆளுநர் அறிவுறுத்தல் பொதுவிடுமுறை … Read more

மிக்ஜாம் புயல்..! தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுரை..!

Tngovt

மிகஜாம் புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிர்வங்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு … Read more

நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!

Tasmac

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக காரணங்களுக்காக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல்.! அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.!  கனமழை … Read more

சென்னையில் கனமழை எதிரொலி – மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு

Chennai Rains

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்னும்  நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது. மிக்ஜாம் ( Michaung) என பெயரிடப்பட்ட இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. செம்பரம்பாக்கம் … Read more

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6000 கனஅடி நீர் திறப்பு..!

Semparampaakkam

தமிழகத்தில் பருவமழை  தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. அதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   … Read more

மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு..!

chennai university

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் தேங்கி கடல் போல காட்சியளிக்கிறது. இந்த நிலை தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

சென்னையில் மேலும் இரண்டு சுரங்கபாதைகள் மூடல்..!

கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை  மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. இதனால், தாழ்வான இடங்களில் மீண்டும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளதால், தி.நகர் மேட்லி சுரங்க பாதை மற்றும் ரங்கராஜபுர சுரங்கப்பாதை மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் … Read more

மக்களே இந்த பாதை வழியாக போகாதீங்க..! சென்னையில் 2 சுரங்க பாதைகள் மூடல்..!

கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளதால், தி.நகர் மேட்லி சுரங்க பாதை மற்றும் ரங்கராஜபுர சுரங்கப்பாதை மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சமீப காலமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்றும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய … Read more

மாணவர்கள் கவனத்திற்கு..! இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா..?

12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 28ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், மதுரை, … Read more