மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தேசிய கல்விக் கொள்கை, காவி கொள்கையாக உள்ளது என திருவனந்தபுரம் சிபிஐ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை. திருவனந்தபுரம் CPI 24-ஆவது மாநில மாநாட்டில் மத்திய-மாநில உறவுகள் குறித்து சிறப்புரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், நேரடியாக செய்ய முடியாத அரசியல் தலையீடுகளை சட்டத்தை கொண்டு செய்ய பார்க்கிறது மத்திய அரசு. மாநிலங்கள் பிரச்சனை தொடர்பாக கடிதம் எழுதியும் பதில் வருவதில்லை. மாநிலங்களின் எண்ணங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பினால் அதற்கு உரிய பதில் அளிப்பதில்லை. திமுக, கம்யூனிஸ்ட் ஆட்சியில் … Read more

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறார் முதல்வர் – டிடிவி தினகரன்

மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை என டிடிவி தினகரன் குற்றசாட்டு. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ஆட்சியைப் பிடிப்பதற்காக ஸ்டாலின் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் சேவை செய்வதற்கான FMG தேர்வை எழுதி, தேர்ச்சி … Read more

இனி திருமணச் சான்றிதழ்களை இணையவழியில் திருத்தம் செய்யலாம்! புதிய வசதி அறிமுகம்!

திருமணச் சான்றிதழ்களை இணையவழி திருத்தம் செய்யும் வசதியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில் திருமணச் சான்றிதழ்களை இணையவழி திருத்தம் செய்யும் வசதியை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இனி திருமணச் சான்றிதழ்களை இணையவழியில் திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து திருமணச் சட்டம் 1955, தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009, சிறப்புத் திருமணச் சட்டம், 1954, இந்திய கிறித்துவ திருமணச் சட்டம், 1874 ஆகிய திருமணப் … Read more

#JustNow: போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறை துவக்கம்!

போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை துவக்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பத்திரப்பதிவு துறையில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போலி பத்திரப்பதிவால் சென்னை அமைந்தகரையில் உள்ள நிலத்தை இழந்த நடிகை வாணிஸ்ரீக்கு நிலம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை புதிய சட்டம் … Read more

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் காலுன்ற நினைப்பது நடக்காது – வைகோ

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மண்ணிருக்கும் வரை சி.பா.ஆதித்தனாரின் புகழ் இருக்கும். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை … Read more

#BREAKING: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் – தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய வழி சூதாட்டத்தினை தடுக்க தயாரிக்கப்பட்ட அவசரச் சட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களால் பலர் பணத்தையும், உயிரையும் இழந்து வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு இன்று காலை முதலமைச்சர் முகஸ்டலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த … Read more

#BREAKING: நம்முடைய பயணம் நெடியது.. நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின்

மக்களுக்கான பணியைக் கவனிப்போம், நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிர்ப்போம் என முதலமைச்சர் அறிக்கை. நச்சு அரசியல் சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் கவனமுடன் செயல்படுவோம், நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்தி, மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு என இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த லட்சிய நோக்கத்துடன் தான் திமுகவை பேரறிஞர் … Read more

மழை நீர் தேங்காது என்ற நினைப்போடு மெத்தனமாக இருந்துவிடக்கூடாது – முதலமைச்சர்

மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் உத்தரவு. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நீர் நிலைகள் பாதுகாப்பு, முகாம்கள், மீட்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை ஆய்வுப் பணிகள், போர்க்கால அடிப்படையில் பணிகளை நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. நீர்வளம், வருவாய், பொதுப் பணி, நகராட்சி நிர்வாகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளுடன் முதலமைச்சர் ஆய்வு செய்யவுள்ளார். பல்வேறு … Read more

அது யார் என்று முதல்வருக்கு தெரியும்..பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்க – வானதி சீனிவாசன்

கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களை ஆய்வு செய்த பின் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டி. கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக கோவை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலத்தை பார்வையிட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், நாட்டை சீர்குலைக்க நினைப்பவர்கள், குண்டு வைக்க நினைப்பவர்கள் தான் இம்மாதிரியான செயலில் ஈடுபட முடியும் என குற்றசாட்டினார். அது … Read more

#BREAKING: ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல்?

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல் என தகவல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளது. முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. குறிப்பாக அடுத்த … Read more