ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் – ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு தமிழ்நாட்டில் 39வது பலி நிகழ்ந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு தமிழ்நாட்டில் 39வது பலி நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியான பிறகு தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தமிழக ஆளுநர் 73 நாட்களாகியும் … Read more

ஆன்லைன் சூதாட்டம்; ஆளுநர் செய்வது நியாயமல்ல, இதுவரை 35 பேர் உயிரிழப்பு – அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி 53 நாள் கடந்து விட்டது. மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களுக்கு நவம்பர் 25-ஆம் தேதியே தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருந்தது. ஆன்லைன் சூதாட்டம் என்ற … Read more

ஆளுநருக்கு எதிராக தி.க., மதிமுக ஆர்ப்பாட்டம்!

சென்னையில் திராவிட கழகம் தலைவர் கீ.வீரமணி தலைமையில் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம். ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க இயற்றப்பட்ட அவசர சட்ட முன் வரைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்என் றவு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை முன் திராவிட கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என அக்கட்சி பொதுசியலாளர் வைகோவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத தமிழ்நாடு … Read more

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை! ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும் – பாமக தலைவர்

ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் 34-ஆவது தற்கொலை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அவசர சட்டம் முன் வரவை சட்டப்பேரவையில் … Read more

நாளை ஆர்ப்பாட்டம்! ஆளுநர் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது – வைகோ

ஆளுநர் வழக்கம் போல் அதிகார ஆணவத்தோடு நடந்து கொண்டதால் மேலும் ஒரு உயிர் போய் விட்டது என வைகோ குற்றச்சாட்டு. ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் ஆளுநரின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றசாட்டியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற தற்கொலைகள் ஏராளமாக நடப்பதால்தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – அமைச்சர் விளக்கம்

ஆளுநர் ஒப்புதல் அளித்தால் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியானது பற்றி அமைச்சர் ரகுபதி விளக்கம். புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியானது பற்றி விளக்கமளித்தார். அவர் கூறுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கான நோக்கம் முகப்புரையிலேயே தெளிவாக கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மி என்பது ஒரு நோய், அதை ஒழிக்கவே பாடுபட்டு வருகிறோம். 95% மக்கள் ஆன்லைன் ரம்மியை தடை … Read more

ஆன்லைன் சூதாட்டம்; 33-ஆவது தற்கொலை இதுவாகும் – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது என பாமக தலைவர் எச்சரிக்கை. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலை நீடித்து வருகிறது. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி … Read more

அவசர சட்டம் காலாவதியானது! சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்!

நிரந்தர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தினால் ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம். ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் நேற்றுடன் காலாவதியானது. அதே நேரத்தில், இதற்கான சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. செப்டம்பர் 26-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு அக்டோபர் 1-ஆம் தேதி … Read more

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை! மீறினால் 10 லட்சம் அபாரம், 3 ஆண்டுகள் சிறை!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மீறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 லட்சம் அபராதம். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டத்துக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த நிலையில், ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார் இதையடுத்து, … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என ஓபிஎஸ் ட்வீட். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் மசோதா இயற்றப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் ஜூன் மாதம் சமர்ப்பித்தது. இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த செப்.26-ம் தேதி … Read more