அது யார் என்று முதல்வருக்கு தெரியும்..பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்க – வானதி சீனிவாசன்

கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களை ஆய்வு செய்த பின் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டி.

கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக கோவை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலத்தை பார்வையிட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், நாட்டை சீர்குலைக்க நினைப்பவர்கள், குண்டு வைக்க நினைப்பவர்கள் தான் இம்மாதிரியான செயலில் ஈடுபட முடியும் என குற்றசாட்டினார்.

அது யார் என்று தமிழக முதல்வருக்கு தெரியும், எனவே பாரபட்சமின்றி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். மேலும், அரசியல் காரணத்திற்காக நடவடிக்கை எடுக்க தவற வேண்டாம். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களின் சிசிடிவி காட்சிகளை கொடுத்தும் ஏன் நடவடிக்கை எடுக்க தாமதம்? யார் அழுத்தம் கொடுக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment