#BREAKING: ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல்?

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல் என தகவல்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளது. முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. குறிப்பாக அடுத்த மாதம் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் கொண்டு வருவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் ஒருசில ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மட்டும் தடை செய்வது என்றும், மற்ற விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது உணவு மசித்த மசோதாவில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கமிட்டி அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அரை மணிநேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தடை சட்ட மடசோதாவிற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  தமிழக சட்டப்பேரவை எப்போது கூடுவது என்ற தேதியையும் சபாநாயகருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment