#Breaking:அதிர்ச்சி…அண்ணா பல்.கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில்,இன்று கொரோனா தொற்று இரண்டாயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது. இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.40 மாணவர்களை பரிசோதனை செய்ததில் தற்போது 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் 6 மாணவர்களும் தனிமைப் படுத்தப்பட்டுளனர் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக,சென்னை ஐஐடியில் இதே போல் … Read more

#BREAKING: சென்னை ஐஐடியில் 200-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு!

சென்னை ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 196ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களாகவே படிப்பிடிப்பாக மாணவர்கள் உள்பட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் கூறுகையில், இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. ஆனாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். … Read more

#justnow:சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா – மரு.செயலாளர் ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே,சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில்,சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும்,இதனால்,கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளதாகவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும்,நேற்று வரை சென்னை … Read more

#JustNow: இனி ஐஐடியில் தமிழ்தாய் வாழ்த்து…மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி!

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் பாடலை இசைக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி. சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தேசிய கீதத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்து & வந்தே மாதரம் பாடல்களையும் இசைக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் கூறுகையில், அனைத்து இந்திய மொழிகள், கலாச்சாரங்களையும் போற்றுவதே மத்திய அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, கடந்த 2018-ம் ஆண்டும் சென்னை ஐ.ஐ.டியில் நடந்த மத்திய அரசின் விழாவில் சம்ஸ்கிருதத்தில் மகா … Read more

#BREAKING: அதிர்ச்சி! சென்னை ஐஐடியில் 100-ஐ தாண்டியது கொரோனா!

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு மொத்தம் எண்ணிக்கை எண்ணிக்கை 111-ஆக உயர்வு. சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு 111-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 111 பேரில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். மீதம் 109 பேரில் ஒருசிலருக்கு இனைநோய் பிரச்சனைகள் உள்ளன என்றும் கூறினார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு … Read more

#Breaking:சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,சென்னை ஐஐடி வளாகத்தில் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள்,கொரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.அதன்பின்னர்,சென்னை ஐஐடியில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா;இவை கட்டாயம் – மரு.செயலாளர் போட்ட உத்தரவு!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்  வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக நேற்று முன்தினம் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி,அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும், அக்கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: “அனைத்து கல்வி நிலையங்கள்,அலுவலகங்கள் என … Read more

#BREAKING: சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு.. XE வகை – சுகாதாரத்துறை செயலாளர்

சென்னை ஐஐடியில் இதுவரை 55 பேருக்கு கொரோனா உறுதியானது என்று சுகாதாரத்துறை செயலாளர் தகவல். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடியில் 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் மொத்தம் இதுவரை 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்கள் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கின்றனர். கொரோனா கண்டறியப்பட்ட அனைவருக்கும் குறைவான … Read more

#BREAKING: சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30-ஆக அதிகரிப்பு!

சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு என தகவல். சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 666 பேருக்கு பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னை ஐஐடியில் மாணவர்கள் உள்பட 12 பேருக்கு தொற்று உறுதியானது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். கொரோனா … Read more

சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா! – சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை!

டெல்லி போன்ற சூழல் தமிழகத்திலும் உருவாகலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் எச்சரிக்கை. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என்றும் தொற்று உறுதியானதால் ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளியாகியிருந்தது. இந்த 10 பேரில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது … Read more