சசிகலா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

sasikala

அதிமுக பொதுச்செயலாளர் பதிவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதன்பின், ஜெயலலிதா மறைவிற்கு ஒன்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டது. கடந்த ஆண்டு ஓபிஎஸ் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10வது முறையாக நீட்டிப்பு.! 

Minister Senthil Balaji - Madrash High court

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு இதை அறுவை சிகிச்சை முடிந்து, அமலாக்கத்துறை விசாரணை காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு 9வது முறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலானது நீட்டிக்கப்பட்டு இருந்தது. கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நவம்பர் 6ஆம் (இன்று) தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு … Read more

சனாதன ஒழிப்பு பற்றி பேசிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.! சென்னை உயர்நீதிமன்றம்.!

Minister Udhayanidhi stalin - Madras high court

கடந்த செப்டம்பர் 2ஆம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில், சனாதன ஒழிப்பு மாநாடு எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சேகர்பாபு, திராவிட கழக தலைவர் கீ.வீரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு மலேரியா போல சனாதானம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். அமைச்சரின் இந்த கருத்து இந்தியா முழுக்க பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் … Read more

#BREAKING: சசிகலாவை நீக்கியது செல்லும் – ஓ.பன்னீர் செல்வம்..!

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதிமுகவின் மூத்த தலைவர்களாக இருந்த மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் முன்மொழியப்பட்டும், வழிமொழியப்பட்டும் அதிமுக … Read more

தூத்துக்குடி துப்பாக்கிசூடு: நடவடிக்கை எடுக்காதது ஏன்? – தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

Thoothukudifiringcase

தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில்,  பின்ன சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை … Read more

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மீதான புகாரை விசாரிக்க உத்தரவு..! – சென்னை உய்ரநீதிமன்றம்

chennai high court

கடந்த வருடம் பொங்கலின் போது, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்ட போது, அதற்காக கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் தரமற்றவையாக இருந்ததாகவும், பொங்கல் பரிசுத்தொகுப்பில் வெள்ளம், கரும்பு, பருப்பு, புலி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாக இருந்ததாகவும் புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தரமற்ற பொருட்களை வழங்கியதன் மூலம், மக்களின் பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்கியுள்ளது … Read more

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து என்னை நீக்கியது செல்லாது – சசிகலா

VK SASIKALA

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி விகே சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து விகே சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அதிமுகவின் மூத்த தலைவர்களாக இருந்த மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் முன்மொழியப்பட்டும் வழிமொழியப்பட்டும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த சசிகலாவை நீக்கியது செல்லாது, … Read more

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது – ஐகோர்ட்

neet case

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற தெரிவித்துள்ளது. சமீபத்தில் சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கி இருந்தாலும், இதனை மாபெரும் மக்கள் இயக்கமாக தான் … Read more

தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!

chennai high court

அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக, ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பினர், நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் … Read more

முன்னாள் காமராஜ் மீதான வழக்கு: எடுத்த நடவடிக்கை என்ன? – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு!

kamaraj

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பி லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், பொது விநியோக திட்ட உணவு பொருள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்துள்ளதாக ஓபிஎஸ் அணியில் உள்ள புகழேந்தி புகார் அளித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டு புகார் அளித்த நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜர் மீதான முறைகேடு … Read more