Thursday, November 30, 2023
Homeதமிழ்நாடுஅமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மீதான புகாரை விசாரிக்க உத்தரவு..! - சென்னை உய்ரநீதிமன்றம்

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மீதான புகாரை விசாரிக்க உத்தரவு..! – சென்னை உய்ரநீதிமன்றம்

கடந்த வருடம் பொங்கலின் போது, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்ட போது, அதற்காக கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் தரமற்றவையாக இருந்ததாகவும், பொங்கல் பரிசுத்தொகுப்பில் வெள்ளம், கரும்பு, பருப்பு, புலி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாக இருந்ததாகவும் புகார்கள் எழுந்தது.

இதுதொடர்பாக திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தரமற்ற பொருட்களை வழங்கியதன் மூலம், மக்களின் பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்கியுள்ளது – டிடிவி தினகரன்

முதல்வரிடம் புகார் அளித்து, ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் இது தொடர்பான அதிகாரிகள் மீதான புகாரை விசாரிக்க லோக் அயூதாவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கையுடன் புகாரளித்திருந்தார். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி இதனை தள்ளுபடி செய்தார்.

இதனை தொடர்ந்து, அவரது மனுவை தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி,   இதனை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். மனுதாரரின் கோரிக்கை மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த புகாரை விசாரிக்கும்படி, லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார்.